twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாஸ் சினிமா முடங்கியது... லக்ஸில் ஷோக்கள் ரத்து!

    By Shankar
    |

    சென்னை: சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 190 இடங்களில் இன்று மெகா ரெய்டு நடந்து வருகிறது.

    இதன் பகுதியாக சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் சினிமா அரங்குகளிலும் சோதனை நடக்கிறது. இதன் காரணமாக வேளச்சேரியில் உள்ள லக்ஸ் சினிமாவின் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

     Raid in Jazz cinemas: Shows cancelled in Luxe mall

    தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் நிறுவனமாக வளர்ந்தது ஜாஸ் சினிமாஸ். இதனை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜெயலிலதா உயிருடன் இருந்தபோதே ஜாஸ் சினிமாஸ் ஆரம்பிக்கப்பட்டது. வந்த வேகத்தில் அப்போதுதான் புதிதாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தொடங்கப்பட்ட சத்யம் சினிமாஸின் லக்ஸ் சினிமாவை வாங்கியது ஜாஸ். மொத்தம் 11 அரங்குகள். அவற்றில் ஒன்று ஐமேக்ஸ் தியேட்டர். 1000 கோடி ரூபாய்க்கு இந்த அரங்குகளை வாங்கியதாக தகவல் வெளியானது.

    ஆனால் அப்போது எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. ஜாஸ் நிறுவனமும் கபாலி, விவேகம் என பெரிய படங்களை வாங்கி விநியோகித்தது. இன்று ஜாஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முக்கியமான விநியோக நிறுவனமாகத் திகழ்கிறது.

    இந்த நிறுவனத்தில் இன்று காலை முதலே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல நூறு பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    லக்ஸ் சினிமா அரங்குகளுக்கான முன்பதிவு செய்யும் தளத்திலும் படங்களுக்கு டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை. Whoa! Something went wrong என்ற செய்திதான் வருகிறது.

    English summary
    Due to IT raids in Sasikala relatives houses and offices, Jazz cinema's Luxe mall has been closed and shows cancelled for the day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X