ஜெயிலர் என்னதான் வசூல் மழை கொட்டினாலும்.. "வெற்றி விஜய்க்கு.." எப்படி தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித் மற்றும் விஜய் இடையே தான் இத்தனை ஆண்டுகள் போட்டியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு அந்த போட்டி முற்றிலுமாக மாறி ரஜினி vs விஜய் போட்டியாக உருவெடுத்துள்ளது. இதனால், விஜய்க்கு வருத்தம் ஏதுமில்லை என்றும் ஹேப்பியாகத்தான் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல ஆண்டுகளாக விஜய்யுடன் நேரடி மோதலில் ஈடுபடக் கூடாது என பட ரிலீஸ் பந்தயத்தை தவிர்த்து வந்த அஜித் இந்த ஆண்டு ஜனவரியில் எப்படியாவது தனது துணிவு பந்தயம் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் விஜய்யின் வாரிசு படத்துடன் கிளாஷ் விட்டார்.

Rajnikanth vs Vijay clash only in Kollywood, Ajith missed the race due to his own commitments

ஆனால், அந்த போட்டியிலும், அஜித்தின் துணிவு படத்தை விஜய்யின் சீரியல் டிராமா படமே வசூலில் முந்தி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏகே 62வை செதுக்க நினைத்த அஜித்: துணிவு மற்றும் வாரிசு மோதலில் நடிகர் அஜித் படம் எதிர்பார்த்த வசூலை வாரிக் குவிக்காத நிலையில், போனி கபூர் இறுதிவரை வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

விஜய்யின் லியோ படத்துடன் ஏகே 62 படத்தை மோதவிட்டு நிச்சயம் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற நினைப்பில் தான் இதுவரை செய்யாத அளவுக்கு ஒரு படத்தில் கூட விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நடிக்காத நிலையிலும், அவரை வேண்டாம் என நீக்கி விட்டு மகிழ் திருமேனியை அஜித் கொண்டு வந்தார் என்றனர்.

ஆசை யாரை விட்டது: ஆனால், தனக்கு இருந்த பைக் டூர் ஆசை காரணமாக சினிமா மற்றும் பைக் ரேஸ் என இரண்டிலும் சரியான கவனத்தை அஜித்தால் செலுத்த முடியவில்லை என்றும் பைக் ரேஸ் பக்கம் தனது மனதை செலுத்திய நிலையில், கோலிவுட் ரேஸில் இருந்து மொத்தமாக பின் வாங்கி விட்டார் நடிகர் அஜித் என்றும் சினிமா வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்கள் குவிந்துள்ளன.

தளபதி ஹேப்பி தான்: ரஜினி vs கமல் போட்டி பல வருடங்களாக இருந்து வந்த நிலையில், விஜய் vs அஜித் போட்டி ஆரம்பித்தது. ஆனால், தற்போது விஜய் vs ரஜினி என்கிற போட்டி கோலிவுட்டில் கிளம்பியுள்ள நிலையில், விஜய்க்கு வருத்தம் இல்லை, ஹேப்பி தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டிப் போட்டு தோற்றாலும், சீனியர் உடன் தானே என்றும் ஜெயித்து விட்டால், மிகப்பெரிய சாதனை என்றும் பக்காவாக திட்டம் போட்டு லியோ படத்தை இறக்க முயற்சி செய்து வருகிறார் விஜய் என்று சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சு நிலவி வருகின்றன. அஜித் சினிமாவில் ஆர்வம் காட்டாத நிலையில், அவரது ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் ரசிகர்களாக மாறி அவருக்கு சப்போர்ட் செய்து, விஜய்க்கு எதிராக நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X