ஏன் ராய்லட்சுமி... பிறந்தநாளும் அதுவுமா இப்படியா பண்றது... பாவம் எத்தனை பேர் பயந்துட்டாங்க தெரியுமா
நடிகை ராய்லட்சுமியின் சின்ட்ரெல்லா படத்தின் புரோமோ வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை: நடிகை ராய்லட்சுமியின் சின்ட்ரெல்லா படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகை ராய்லட்சுமி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் நடித்துள்ள சின்ட்ரெல்லா படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.
பலரது பாராட்டுக்களையும் இந்த புரோமோ வீடியோ பெற்றுள்ளது.

சுவரில் புகைப்படங்கள்
ஒரு அறையின் சுவரில் நிறைய புகைப்படங்கள் பிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு மத்தியில் சின்ட்ரெல்லாவின் புகைப்படம் இருக்கிறது.

சின்ட்ரெல்லா போட்டோ
அறை கதவில் இருந்து கேரமா மெதுவாக போட்டோவை நெருங்கி செல்கிறது. பின்னணியில் ஒலிக்கும் குரலில், 'இந்த சின்ட்ரெல்லா புகைப்படம் பல கோடி விலை போகும்' எனும் உரையாடல் கேட்கிறது.
பயமுறுத்தும் பேய்
திடீரென கேமரா அதிவேகமாக நகர்ந்து, சின்ட்ரெல்லா போட்டோவுக்கு அருகில் செல்ல, அதில் இருந்து ஒரு பேய் வெளியே வந்து நம்மை பயமுறுத்துகிறது. ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு பார்ப்பவர்கள் ஒரு நொடி பயந்துபோவது நிச்சயம்.

இப்படியா பண்றது
பின்னர் பழையபடி அந்த பேய் சின்ட்ரெல்லாவாக (ராய்லட்சுமி) மாறிவிடுகிறது. இந்த பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்தவர்கள், அசந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர். பிறந்தநாளும், அதுவுமா ராய்லட்சுமி இப்படி செய்துவிட்டாரே எனும் முணங்கல்களும் கேட்கிறது.


Click it and Unblock the Notifications