நம்ம ‘தண்ணி’ பிரச்சினை இப்போ ஹாலிவுட் வரை பேமஸ்... யாரு பீல் பண்ணியிருக்காங்க பாருங்க!

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை தொடர்பாக ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை: மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும் என பிரபல ஹாலிவுட் நடிகரும், டைட்டானிக் படத்தின் ஹீரோவுமான லியோனார்டோ டிக்காப்ரியோ தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னை மாநகரின் மிகச்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது தண்ணீர் பிரச்சினை. நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், வெளியூர்களில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல கோடிகளை கொட்டி, திட்டங்கள் தீட்டி வருகின்றன. மறுபுறம் மக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு இயற்கையை பேணிக் காக்க மரம் நடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னையின் தண்ணீர் பிரச்சினை உலகளவில் கவனம் பெற்று வருகிறது.

டைட்டானிக் ஹீரோ:

டைட்டானிக் ஹீரோ:

இந்நிலையில் டைட்டானிக் படம் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான பிரபல ஹாலிவுட் ஹீரோ லியானார்டோ டி காப்ரியோவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிபிசியில் வெளிவந்த சென்னை வறட்சி குறித்த செய்தியை படித்த பின்பு, தனது வருத்தத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

மழை தேவை:

மழை தேவை:

அப்பதிவில் அவர், "மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. இந்தியாவின் தென்னகத்து நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் மணி கணக்காக காத்திருக்கின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாடு:

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால், சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர். மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்'" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

கிணறு புகைப்படம்:

கிணறு புகைப்படம்:

இந்தப் பதிவில் அவர், பெரிய கிணறு ஒன்றில் மக்கள் வாளி மூலம் தண்ணீர் இறைக்கும் புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இங்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலர், சென்னை தண்ணீர் தட்டுப்பாடு பற்றி வாய் திறக்காமல் உள்ள நிலையில், ஹாலிவுட் ஹீரோ இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X