இயற்கையே அழுகிறது.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு.. பண்ணை வீடு உள்ள தாமரைப்பாக்கத்தில் திடீர் மழை
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இறுதி சடங்கு செங்குன்றம் - திருவள்ளூர் சாலை நடுவே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நாளை நடைபெறவிருக்கிறது.
காலை முதல் நன்றாக வெயில் அடித்து வந்த நிலையில், இன்று மதியம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி வந்த பிறகு சோகத்தில் மூழ்கிய வானம் தற்போது மழையாக பொழிந்து வருகிறது.
இயற்கையும் சேர்ந்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக அழுகிறது என மக்கள் கூறி வருகின்றனர்.

ஒட்டுமொத்த இந்தியாவையே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வானிலையில் மழை குறித்த அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும், கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென தற்போது கனத்த அழுகையுடன் இடி இடித்து கோர மழை பெய்து வருவது எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி அறிந்தே இப்படி இயற்கை அன்னை அழுகிறாள் என்பதை உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications











