மழையுடன் எப்படியெலலாம் நம்ம சினிமாக்காரர்கள் மல்லுக்கட்டுகிறார்கள் பாருங்கள்... !
சென்னை: மழை என்றால் நாம் பொதுவாக என்ன செய்வோம்.. குடையை விரித்துப் பிரித்து நனைந்து விடாமல் நடக்கப் பார்ப்போம்...ரொம்பப் பெய்தால் அப்படியே எங்காவது ஓரம் கட்டி மழையை வேடிக்கை பார்ப்போம்- நனையாமல்.
நிறையப் பேருக்கு மழையை ரசிக்கப் பிடிக்கும். பலருக்கு நனையப் பிடிக்கும்.. சிலருக்கு மழை என்றாலே பயமும் அலர்ஜியும் வரலாம்... பெரும்பாலானவர்கள் மழையில் நனைந்தால் சளி பிடிக்குமே, காய்ச்சல் வருமே என்று தயங்குவார்கள்.
இப்படிப்பட்டவர்களைத்தான் வைரமுத்து தனது கவிதை ஒன்றில் செல்லமாக விளாசியிருப்பார்..
ஆனால் தமிழ் சினிமாவில்.. தமிழ் என்று இல்லை, இந்திய சினிமாவில் இந்த மழையை எபப்டியெல்லாம் பாவிக்கிறார்கள் என்று பார்த்தால்.. எதுக்கு பேசிக்கிட்டு.. வாங்களேன், ஒரு ரவுண்டு பார்த்து விட்டுத்தான் வருவோமே...

வெள்ளை டிரஸ் 10 செட் பார்சேல்...
80-கள், 90களில் வந்த படங்களில் மழை சீன் என்று ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். அது காதல் சீனாக இருக்கலாம். டூயட்டாக இருக்கலாம். அல்லது சண்டைக் காட்சியாக இருக்கும். காதல், டூயட் சீனாக இருந்தால் பெரும்பாலும் வெள்ளை டிரஸ்ஸில்தான் ஹீரோயினை காட்டுவார்கள்.

நீ காற்று நான் மழை...!
இந்த வெள்ளை டிரஸ்ஸை ஹீரோயின்களுக்குத்தான் பெரும்பாலும் போட்டு விடுவார்கள்.. அதுவும் டிரான்ஸபரன்ட்டாக இருக்குமாறு கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.. ஹீரோவுக்கு பட்டன் போடாத சட்டை.. உள்ளே பெரும்பாலும் பனியன் இல்லாதமாதிரி காஸ்ட்யூம் செட் பண்ணுவார்கள்..

ஹீரோயின்தான் கட்டிப்பிடிக்கோணும்...
இதுமாதிரியான ரொமான்ஸ் காட்சியில் பெரும்பாலும் அந்த ஹீரோவை- அது ராமராஜனாக இருந்தாலும் சரி..சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் சரி - ஹீரோயின்தான் தான் ஹீரோவை அடிக்கடி கட்டிப்பிடிப்பார்.. ஹீரோ சும்மாதான் இருப்பார்.. கட்டிக்கொள்ள வரும் ஹீரோயினை அரவணைப்பது மட்டுமே அவரது ஜாப் ஆக இருக்கும்...ஏன் அப்படின்னு தெரியலை...

சோலோ டான்ஸ்...
மழை அது பாட்டுக்கு வெளுத்துக் கொண்டிருக்கும்.. அந்தப் பக்கம் ரேவதி அவர் பாட்டுக்கு ஜாலியாக பாட்டுப் பாடிக் கொண்டிருப்பார்- வான் மேகம் பூப்பூவாய் தூவும் என்று. இதுமாதிரியான மழையில் சோலோ டான்ஸ் நிறைய வந்திருக்கிறது தமிழ் சினிமாவில்.

காதலா.. காமமா....
... இப்படி எது என்று தெரியாமலேயே, பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு மழையில் நாயகனையும் நாயகியையும் ஆட விட்டு மழைத் துளியோடு காதல் துளியையும் இணைத்து சொட்ட விடுவார்கள் நம்ம ஊர் டைரக்டர்கள்.

அங்கங்களின் அழகைக் காட்ட
அழகான மழையைக் காட்டுவதை விட நாயகிகளின் உடல் அங்கங்களைக் காட்டுவதற்காகவே இந்த மழை சீன் வைக்கிறார்கள் பலரும் என்பது மக்கள் கருத்து. நாயகியர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே இது புரியும்...

பலாத்காரத்திற்கும்
அதேபோல பலாத்கார காட்சிகளையும் கூட மழையை வைத்து நிறைய எடுத்துள்ளனர். ஹீரோயின் தனியாக நடந்து போய்க் கொண்டிருப்பார். அப்போது பார்த்து மழை வரும்.. ஆனால் அவர் கையில் குடை இருக்காது.. சின்ன கர்ச்சீப் கூட இருக்காது.. அப்போது பார்த்து தடி தடியாக நான்கு குண்டர்கள் வருவார்கள்.. உடனே ஆரம்பிக்கும் பலாத்கார துரத்தல்.. அந்த சமயம் பார்த்து ஹீரோ, ஏதாவது வாடகை சைக்கிளை அல்லது சாலையோரம் மூச்சா போய்க் கொண்டிருக்கும் ஒருவரது பைக்கை லவட்டிக் கொண்டு படு வேகமாக வந்து கொட்டும் மழையில் சண்டை போட்டு நாயகியைக் காப்பாற்றுவார்.. பிறகென்ன, உடனே காதல் பூக்கும்.. டூயட் பீறிட்டுக் கிளம்பும்...

வில்லனுக்கும் ரெய்ன் உண்டுங்கோ...
கவர்ச்சிக்கு மட்டுமல்லாமல் டெரர் காட்டுவதற்கும் நம்மவர்கள் மழையைப் பயன்படுத்துவது வழக்கம். கூடவே இடி மின்னலையும் டிடிஎஸ் எபக்ட்டில் முழக்கிக் காட்டுவார்கள். கொட்டும் மழையில் வேட்டியை மடித்துக் கொண்டு, நாய் பொறையைக் கவ்விக் கொண்டு வருவது போல ஹீரோ வாயில் பெரிய சைஸ் அரிவாளைக் கவ்வ வைத்து முறைப்பும், விறைப்புமாக நூறு அடியாட்களை ஒத்த ஆளாக ஹீரோ அடிப்பாரு பாருங்க.. படம் பார்க்கும் நமக்கு செவுலு அவுல் வாங்கும்.

அட்வைஸ் தரவும் உதவும் மழை
அது மட்டுமா.. சென்டிமென்ட் காட்சிகளுக்கும் கூட இந்த மழை உதவுகிறது. யாராவது வீட்டை விட்டு வெளியே போனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.. பாஸ் என்கிற பாஸ்கரனில் கூட இப்படி ஒரு சீன் வரும். அப்படியாப்பட்ட சீன்களில் நடுச் சாலையில் அல்லது தெரு முக்கில் வைத்து யாராவது யாருக்காவது அட்வைஸ் தருவார்கள்..அப்படிப்பட்ட காட்சிகளையும் நமது மழையை வைத்து நிறைய எடுத்துள்ளனர்.

குழம்பிப் புலம்பும்போதும் மழையே துணை...
அதாவது வீட்டில் ஹீரோவுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் டக்கென்று வெளியே வந்து விடுவார்.. வரும்போது படாரென்று வானம் வெடித்து மழையைக் கொட்டும்.. உடனே வானத்தைப் பார்த்து ஹீரோ ஒரு சிரிப்பு சிரித்தபடி வரும்போது.. கூடவே தத்துவமும் கக்கிக் கொண்டு வரும்... அப்படிக் கக்கும் தத்துவத்தை அள்ளிக் கொள்வதற்காகவே யாராவது ஒரு நண்பன் சிக்குவான்.. அதுதான் இந்த மழை சீனின் ஹைலைட்....
இப்படி மழையை வைத்து நிறைய விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் பாஸ்.. சொல்லிக் கொண்டே போகலாம்.


Click it and Unblock the Notifications











