ரஜினிக்கே இந்த நிலைமை தான்.. வீட்டின் முன் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக சென்னையில் இன்றும் நாளையும் மிக அதி அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சென்னைவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

வானிலை மையம் கூறியபடியே, சென்னையில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து மழை நிறுத்தி நிதானமாக பெய்து வருகிறது. இதனால், ஓட்டேரி, தி நகர், கோடம்பாக்கம், பள்ளிக்கரணை, வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் இருக்கும் மக்கள் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் மாற்றுவழியில் சென்று வருகின்றனர். பல முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதும், பல இடத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

rajinikanth rain chennai

ரஜினிகாந்த்: அரசியல் பிரமுகர், திரைப்பிரபலங்கள் அதிக அளவில் இருக்கும் போயஸ் கார்டனில் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் மழை நீர் குட்டை போல தேங்கி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இதைப்பார்த்த ரசிகர்கள், தலைவா உங்களுக்கு இந்த நிலைமையா என்று கேட்டு வருகின்றனர்.

தயார் நிலையில் மீட்பு குழு: கடந்த சில ஆண்டுகளாக புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. 20 செ.மீட்டர் வரை மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், பேரிடர் மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரம் ஊழியர்கள் பேரிடர் காலத்தில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களையும் தயார் நிலையில் உள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X