சூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத்,சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்ஜிகே எனக்கப்டும் நந்த கோபால கிருஷ்ணன் திரைப்படம். இந்த திரைப்படம் மே 31 வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரொமோசன் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக #AskSuriya என்ற ஹேஷ்டேக் மூலம் சூர்யாவிடம் கேள்வி கேட்கலாம் என்றும், அந்த கேள்விகளுக்கு சூர்யா பதிலளிப்பார் என்றும் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டர் இந்தியா மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.

raina qustion surya

இதில், தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் சின்னத்தளபதி என்று அழைக்கப்படும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா நடிகர் சூர்யாவிடம் #AskSuriya வில் கேள்வி கேட்டிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு எந்த வீரரை பிடிக்கும்? ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார் ரெய்னா.

raina qustion surya

இதற்கு பதில் அளித்த சூர்யா, உங்களையும் தோனியையும் பிடிக்கும் என்றும், ரெய்னா மற்றும் தோனியை அவர்களது பாட்டு பாடும் திறமைக்காகவும், தோனியை அவரது ஓவியம் வரையும் திறனுக்காகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். சூர்யாவின் இந்த பதிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் "Singham is 1.5 tonnes of #Yellov" என்ற வாசகத்துடன் ஷேர் செய்துள்ளது.

raina qustion surya

இதற்கு முன்பு மே 9 2015ல் இதே போல ட்விட்டரில் #AskSuriya ஹேஷ் டேக் மூலம் நடிகர் சூர்யா ரசிகர்களிடம் பேசினார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கேள்விபதில் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். என்பது குறிப்பிடத்தக்கது. #AskSuriya ஹேஷ் டேக் 2015ல் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததை போல, இந்த ஆண்டும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Sent from my iPhone

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X