பிகிலின் ரெயின்போ ஃப்ளிக் சவால்… புள்ளிங்கோ ரெடியா?

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிகில் படத்தின் புரொமோஷனுக்காக ரெயின்போ ஃப்ளிக் சவால் விடுத்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

Recommended Video

Bigil Atlee Salary : பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமா?-வீடியோ

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது.

பிகில் படத்திற்கான அடுத்தகட்ட புரொமோஷனுக்காக புள்ளிங்கோ உதவியை நாடியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.

கால்பந்தாட்டத்தின் ஒரு ட்ரிக் ஷாட்டான ரெயின்போ ஃப்ளிக் ஷாட்டை வீடியோவாக எடுத்து வெளியிடும் சவாலை அறிவித்துள்ளது.

பழிவாங்கும் கதை

பழிவாங்கும் கதை

மெர்சலை போலவே பிகில் படமும் பழிவாங்கும் கதைதான் என இணையத்தில் வைரலாக ஒரு கதை பரவி வருகிறது. மெர்சல் படத்தில் அப்பா கொலைக்கு பழிவாங்கியது போல இந்த படத்தில் மகன் பிகில் கொலைக்கு அப்பாவும் மூத்த அண்ணனும் பழி வாங்க போகிறார்களாம்.

ஹீரோ – ஹீரோயின் கெமிஸ்ட்ரி

ஹீரோ – ஹீரோயின் கெமிஸ்ட்ரி

ராஜா ராணிக்கு பிறகு நயன்தாரா அட்லி படத்தில் இணைந்துள்ளதால், விஜய்க்கும் நயன்தாராவுக்குமான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க்கவுட் ஆகியுள்ளதாம். சிவகாசி, வில்லு படங்களை தொடர்ந்து விஜய், நயன்தாரா பிகில் படத்தில் இணைந்துள்ளனர்.

புள்ளிங்கோவுக்கு சேலஞ்ச்

ஃபுட்பால் விளையாட்டின் ஒரு ட்ரிக் ஷாட்டான ரெயின்போ ஃபிளிக் ஷாட்டை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிரும்படி பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் புள்ளிங்கோவுக்கு சவால் விட்டுள்ளது.

விளம்பரம் ஆரம்பம்

விளம்பரம் ஆரம்பம்

மெர்சல் படத்திற்கு கிடைத்த அளவிற்கு இலவச விளம்பரங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிகில் திரைப்படத்திற்கு கிடைக்காத நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் விளம்பரத்திற்காக பெரும் தொகையை செலவு செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளது. அக்டோபர் 22ம் தேதி சென்னையில் ஃபுட்பால் போட்டி ஒன்றையும் நடத்துகிறது.

More from Filmibeat

Read more about: bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X