ஐயோ ஐயோ.. ரைசா வில்சன் பெற்றோர் நினைச்சது அப்படியாம்ல.. ரகசியம் சொன்ன நடிகை!
சென்னை: நடிகை ரைசா வில்சன் தனது பெற்றோர் சிறுவயதில் சொன்ன விஷயத்தை இப்போது பகிர்ந்துள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில் ரைசா வில்சனும் ஒருவர்.
இந்த நிகழ்ச்சியின் பங்கேற்கும் முன், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

பாலாவின் வர்மா
பிறகு, பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார். இளன் இயக்கிய இந்த படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில், வெளிநாடுகளில் பார்க்கும் வகையில் ரிலீஸ் ஆனது.

காதலிக்க யாருமில்லை
அடுத்து சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், திகாங்கனா சூரியவன்சி நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் காமெடி ஹாரார் படமான, காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர், கார்த்திக் ராஜு இயக்கும் தி சேஸ் படங்களில் நடித்து வருகிறார்.

தலைகீழாக
தி சேஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. காட்டுப் பகுதியில் ரைசா வில்சன் காலில் கயிறு மாட்டிக் கொண்டு தலைகீழாகத் தொங்கி கொண்டு இருப்பது போல அந்த போஸ்டர் இருந்தது. அவர் உடலில் ரத்த காயங்கள் இருக்கின்றன.

சிறுவயது போட்டோ
ரைசா வில்சன் இந்த படத்தில் பறவையியல் ஆய்வாளராக நடிக்கிறார். இந்நிலையில் அவர் சமூக வலைதளத்தில் தனது அப்பா மற்றும் சகோதரியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் தனது பெற்றோர் அப்போது சொன்னதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்பரேட் அதிகாரி
சிறுவயதில் நன்றாக படிக்க வைத்து என்னை கார்பரேட் அதிகாரியாகவும் தங்கை அழகாக இருப்பதால் அவரை நடிகையாக்க, பயிற்சி அளிப்பதாகவும் சொன்னார்கள். காலம் எப்படி மாற்றிவிட்டது பாருங்கள் என்று கூறியுள்ளார் ரைசா வில்சன். அதற்கு ஏராளமான நெட்டிசன்ஸ் கமென்ட்களை பதிவு செய்து இருந்தனர்.

லவ் பண்றீங்களா?
ஒருவர், ஹரீஷை நீங்க லவ் பண்றீங்களா, இல்லையா? என்று கேட்டுள்ளார். மற்றொருவர் இந்த போட்டோவுல ரைசா யாருன்னு தெரியலையே என்று விசாரித்துள்ளார். உங்களுக்கு சிஸ்டர் இருக்காங்களா? அவங்களோட லேட்டஸ்ட் போட்டோவை பதிவு பண்ணுங்களேன் என்று சிலர் கூறியுள்ளனர்.

என்ன பண்றாங்க?
இன்னும் சிலர், உங்க சிஸ்டர் இப்ப என்ன பண்றாங்க? என்றும் நல்ல புகைப்படம், அருமையான நினைவுகள் என்று சிலர் கூறியுள்ளனர். வர்மா படத்துல உங்க நடிப்பு அருமை என்று சில நெட்டிசன்ஸ் அவரை பாராட்டியுள்ளனர். இந்தப் புகைப்படத்தை ஆயிரக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக் பண்ணியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











