போஸ்ட் மேனாக ஆசைப்படும் பிரபல நடிகை.. யாருக்காவது விஷ் பண்ணனுமா? இவங்கக்கிட்ட சொல்லுங்க!
சென்னை: பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல தன்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி பிரபல நடிகை வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை ரைஸா வில்சன். இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார்.
ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் மக்கள் மத்தியில் பரிட்சயம் ஆனார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ரைஸா வில்சன், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா.. 2வது டெஸ்டில் உறுதியானது- மருத்துவமனை அறிக்கை

ரைஸாவிடம் சொன்னால்
அதாவது யாருக்காவது யாராவது, பிறந்த நாள், அனிவர்சரி போன்று என்ன வாழ்த்து சொல்ல வேண்டும் என்றாலும் தன்னிடம் கூறுமாறு கேட்டுள்ளார். அப்படி தன்னிடம் சொல்லும் வாழ்த்து செய்தியை சம்பந்தப்பட்ட நபரிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவாராம் நடிகை ரைஸா வில்சன்.

ஜாலி வீடியோ
உங்களுக்கு போஸ்ட் மேனாக ஆசைப்படுகிறேன் என்றும், உங்களுடைய மெஸேஜ்களை காண ஆர்வமுடன் இருக்கிறேன் என்றும் நடிகை ரைஸா வில்சன் ஜாலியாக தெரிவித்துள்ளார். ரைஸா வில்சனின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது வித்தியாசமான முயற்சியை பாராட்டி வருகின்றனர்

திருமண வாழ்த்து
சில ரசிகர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என விவரங்களுடன் நடிகை ரைஸாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், தன்னுடைய சிறுவயது நண்பரான சக்திக்கு அடுத்த மாதம் இறுதியில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கு உங்கள் மூலம் வாழ்த்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

வரிசையாக படங்கள்
நடிகை ரைஸா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர். ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ரைஸா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











