ரைசா வில்சன்… பிந்து மாதவி... முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

சென்னை : நடிகை ரைசா வில்சன் மற்றும் பிந்து மாதவி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Recommended Video

COVID Vaccine in PERIODS and PREGNANCY | Dr.Karthika தெளிவான விளக்கம்

திரைப்பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பகிர்வதால் அது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைகிறது.

இதனால் பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

18,023

18,023

தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,437 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 409 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து 31,045 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதே சிறந்த ஒன்றாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சம் இருந்து வருகிறது. இதனால், தமிழக அரசு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது.

தடுப்பூசி

தடுப்பூசி

அரசியல் கட்சித் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா வில்சன் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கழுகு, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான பிந்து மாதவி கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார் பிந்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X