ரைசா வில்சனை ’காதலிக்க யாருமில்லை’யாம்.. மூணாறில் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.. வேறலெவல் பிக்ஸ்!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த காதலிக்க யாருமில்லை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ஜிவி பிரகாஷ் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை நடிகை ரைசா வில்சன் ஷேர் செய்துள்ளார்.
மூணாறில் எடுத்த சோலோ போட்டோக்களை போட்டு இணையத்தை தெறிக்க விட்ட ரைசா வில்சன் கோடை சுற்றுலா தான் சென்றுள்ளார் என பார்த்தால், சம்மருக்கு சரியான இடமான மூணாறில் ஷூட்டிங் நடத்தி வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ், குரு சோமசுந்தரம், யோகி பாபு, கெளசல்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்து வருகிறார்.

மூணாறில் ரைசா வில்சன்
பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகையான ரைசா வில்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான எஃப்.ஐ.ஆர் திரைப்படம் நல்ல பாராட்டுக்களை பெற்று வெற்றிப் பெற்றது. அந்த படமும் ரொம்ப நாட்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் தான் வெளியானது. இந்நிலையில், அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கிற்காக மூணாறில் முகாமிட்டுள்ளார் ரைசா வில்சன்.

காதலிக்க யாருமில்லை
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட காதலிக்க யாருமில்லை திரைப்படம் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. இந்நிலையில், மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை மூணாறில் படக்குழு தொடங்கி உள்ளது. அங்கே படக்குழுவுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைசா வில்சன் ஷேர் செய்து டிரெண்ட் செய்துள்ளார்.

பேய் படம்
ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் பேய் படம் ஹிட் அடித்த நிலையில், அவர் நடிப்பில் உருவான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில் அடுத்த பேய் படமாக காதலிக்க யாருமில்லை படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ஷாரா, குரு சோமசுந்தரம், யோகி பாபு, கெளசல்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் யார்
செல்ஃபி படம் ரிலீஸ் ஆகும் சந்தோஷத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் உள்ள நிலையில், இந்த படத்திற்கும் அவர் தான் இசையமைக்க உள்ளார். ஹீரோ ஜி.வி. பிரகாஷ் உடன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான செல்ஃபி போட்டோக்களையும் நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், கார் ஒன்று படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறதா என போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











