ஒரு சைசா எகிறி குதித்து ரைசா போட்ட கோல்.. பல பைசாக்களை சிதறவிட்டு வாய் பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ரைசா வில்சன் கூடைப்பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன்.
பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வர்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வீங்கிப் போன முகம்
தவறான சிகிச்சையை அளித்ததால் தனது முகம் வீங்கியதாக சமீபத்தில் நடிகை ரைசா வில்சன் வீங்கிப் போன முகத்துடன் போட்டோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அழகான ஆப்பிள் பழம் போல இருந்தீங்களே இப்படி அழுகிப் போன ஆப்பிளாக மாறிட்டீங்களே என ரசிகர்கள் ரைசாவின் முகத்தை பார்த்து வேதனைப்பட்டனர்.

முன்பை போலவே
வேறு ஒரு பார்லருக்கு சென்று பழையபடியே தனது முகத்தை சரி செய்து கொண்ட ரைசா வில்சன் மீண்டும் தனது முகம் முன்பை போலவே மாறிவிட்டது என போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கினார். ஆனால், ரசிகர்கள் பெரிதாக ரைசாவை கண்டு கொள்ளாத நிலையில், அதிரடியாக கிளாமர் ரூட்டுக்கு மாறினார்.

சட்டையை கழட்டி விட்டு
உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களையும் கழட்டி விட்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஒரு வழியாக தனது பக்கம் திருப்பினார் நடிகை ரைசா வில்சன். ரைசாவை அப்படி பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என திட்டித் தீர்த்தனர்.
Recommended Video

மீரா மிதுன் ஜெராக்ஸ்
மேலும், முன்ன மாதிரி க்யூட்டா ரைசா வில்சன் இல்லை என்றும், மீரா மிதுனின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கீங்க என்றும் ரைசா வில்சன் வெளியிடும் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதனால் ரைசா வில்சன் கடும் அப்செட் ஆகி உள்ளார்.

ரூட்டை மாத்து
கவர்ச்சி செட்டாகவில்லை விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி விட வேண்டியது தான் என்கிற ரீதியில் தற்போது பேஸ்கட் பால் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரைசா வில்சன். அவரது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குதித்து போட்ட கோல்
பந்தை தட்டி தட்டி எடுத்து வந்து தூக்கி குதித்து கூடையில் சரியாக போடும் வீடியோவை வெளியிட்டு தற்போது ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்துள்ளார் ரைசா வில்சன். நடிப்பதை விட்டு விட்டு விளையாட்டு வீராங்கனை ஆகிடுங்க என்றும் உங்களுக்குள்ள இப்படியொரு திறமை இருக்கா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ
ரைசா வில்சனின் ஹாட் போட்டோக்களை போல இந்த கூடைப்பந்து வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்தியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களும் லைக்குகளையும் ஹார்ட்டீன்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











