பூரா கெட்ட செய்தியாவே இருக்கே.. நியூஸ் சேனல்ஸ் மீது பாயும் பிரபல நடிகை.. டிவிட்டரில் ஆவேசம்!
சென்னை: தொலைக்காட்சிகள் அதிகம் நெகட்டிவ் செய்திகளையே ஒளிபரப்புவதாக பிரபல நடிகை கோபப்பட்டுள்ளார்.
நடிகை ரைஸா வில்சன் வேலையில்லா பட்டதாரி பார்ட் 2வில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அதற்கு முன்பாக பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரைஸா.
இதனால் பிரபலமான அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தில் நடித்து வருகிறார் ரைஸா வில்சன்.

பெரும்பாலான நேரம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரைஸா வில்சன், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது லாக்டவுன் என்பதால் சமூக வலைதளத்திலேயே பெரும்பாலான நேரத்தை கழித்து வருகிறார்.

பூனையின் வீடியோ
அண்மையில் செல்லப்பிராணியான தான் வளர்க்கும் பூனையின் பல வீடியோக்களை ஷேர் செய்த அவர் லாக்டவுன் நேரத்தில் அவை தன்னை போரடிக்காமல் பார்த்து கொள்கின்றன என தெரிவித்தார். தொடர்ந்து தனது வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
மோசமான செய்திகள்
இந்நிலையில் இன்று நியூஸ் சேனல்கள் மீது அதிருப்தி தெரிவித்திருக்கிறார் ரைஸா வில்சன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இது கொரோனா நேரம்.. அதோடு என்னை சுற்றி நடப்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். எனவே உலகளவில் சாத்தியமான அனைத்து செய்தி சேனல்களையும் நான் பின்பற்றத் தொடங்கினேன்.
நான் படிப்பதில் பெரும்பாலானவை மோசமான செய்திகள் என்பதை உணர்ந்தேன்!! நல்ல மற்றும் கெட்ட செய்திகளை அவர்கள் ஏன் சமமாக வெளியிட முடியாது?? என கேட்டுள்ளார்.
செல்வாக்கு மிக்கவர்கள்
ரைஸா வில்சன் தனது மற்றொரு டிவிட்டிலும் செய்தி சேனல்களை மறைமுகமாக சாடியிருக்கிறார். செய்தி சேனல்கள்தான் செல்வாக்கு மிக்கவர்கள், அவர்கள் விரும்பினால் இந்த உலகை மாற்ற முடியும் என்றும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நாளைக்கு அப்படிதான் வரும்
மற்றொரு டிவிட்டில் செய்திச் சேனல்கள் நேர்மறையான செய்திகளில் அதிக கவனம் செலுத்தினால் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரைஸா வில்சனின் இந்த டிவிட்டுக்களை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் செய்தி சேனல்களுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்றுதான் நாளை செய்திகள் வரபேகின்றன என கிண்டலடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











