கன்னட ரீமேக்.. சுந்தர்.சி படத்தில் பிரபல பிக் பாஸ் நடிகை.. நாளை தொடங்குகிறது ஷூட்டிங்!

By

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை, சுந்தர்.சி படத்தில் நடிக்க இருக்கிறார்.

Recommended Video

Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot

காமெடி மற்றும் ஹாரார் படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி, இப்போது அரண்மனை 3 படத்தை இயக்குகிறார்.

இதன் ஷூட்டிங் குஜராத்தில் நடந்தபோது கொரோனா பரவல் அதிகமானது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியது.

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா

அரண்மனை 3 படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். அவர்தான் பேயாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல், ஐதராபாத்தில் நடக்க இருந்தது. கொரோனா காரணமாக, இப்போது சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது.

மாயாபஜார்

மாயாபஜார்

இதற்கிடையே, தனது அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் அவர் படங்களையும் தயாரித்து வருகிறார். இப்போது கன்னடத்தில் ஹிட்டான 'மாயாபஜார்' என்ற படத்தின் ரீமேக் உரிமையை இவர் பெற்றிருக்கிறார். இந்தப் படத்தில், ராஜ் பி ஷெட்டி, வசிஷ்டா சிம்ஹா, பிரகாஷ் ராஜ், அச்சியுத் குமார், சாது கோகிலா உள்பட பலர் நடித்திருந்தனர்.

இயக்குனர் பத்ரி

இயக்குனர் பத்ரி

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு மிதுன் முகுந்தன் இசை அமைத்திருந்தார். கன்னடத்தில் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பத்ரி இயக்குகிறார். இவர் சுந்தர்.சி நடித்த வீராப்பு, ஐந்தாம் படை, பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, சிவா நடித்த தில்லுமுல்லு , ஆடாம ஜெயிச்சோமடா ஆகிய படங்களை இயக்கியவர். சில படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

ரைசா வில்சன்

ரைசா வில்சன்

இதில் பிரசன்னா, அஸ்வின், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக ரைசா வில்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் ஏற்கனவே, வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இந்தப் படத்திலும் நடிக்கிறார். இதன் ஷூட்டிங், சென்னையில் நாளை தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X