ரைசா வில்சன் கவலை அதைப்பத்தினா.. குசும்புக்கார நெட்டிசன்கள் கவலை எதைப் பத்தி இருக்கு தெரியுமா?
சென்னை: தனது செல்ஃபோனை பார்த்தபடி எபிக் ரியாக்ஷன் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை ரைசா வில்சன் சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்ற, கமெண்ட்ஸ் செக்ஷன் கலவர பூமியாக மாறியுள்ளது.
பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமான ரைசா வில்சனுக்கு கோலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் 33 லட்சத்திற்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேலான மக்கள் சுமார் 2 மாத காலத்தில் இந்த கொடிய நோய்க்கு இரையாகி உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால், மேலும் இரு வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்லி கொரோனா நியூஸ்
செய்தி சேனல்கள், பத்திரிகை என எதை பார்த்தாலும், ஒரே கொரோனா என்கிற பெயரும், அதன் கோரத் தாண்டவங்களும் தான் செய்திகளாக வந்து குவிந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ரைசா வில்சன் "Reading the news nowadays.." என்ற கேப்ஷனுடன் எபிக் ரியாக்ஷன் கொடுத்து ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

ரைசா ரியாக்ஷன்
அந்த புகைப்படத்தில் நடிகை ரைசா வில்சன் கொடுத்துள்ள ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர். எலுமிச்சை பழத்தை திண்ணும் போது, இப்படித் தான் ரியாக்ஷன் கொடுப்போம் என ஒரு ரசிகர், செல்ஃபோனுக்கு பதிலாக எலுமிச்சை பழ படத்தை வைத்து கமெண்ட் செய்ய, அதனை ரைசாவும் லைக் செய்துள்ளார்.

கேட்க முடியல
ஆமாம்பா ரைசா சொல்வது உண்மை தான்; இப்போதெல்லாம் செய்தி சேனல்களில் வரும் கொரோனா நியூஸை கேட்கவே முடியல என இந்த ரசிகர், நடிகர் வினு சக்கரவர்த்தியின் எபிக் ரியாக்ஷன் புகைப்படத்தை பதிவிட்டு ஆமோதித்துள்ளார். ரைசாவின் இந்த கருத்துக்கு பலருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாத்ரூம் ரியாக்ஷன்
பியார் பிரேமா காதல் படத்தின் நாயகியின் இந்த எக்ஸ்பிரஷனை சில நெட்டிசன்கள் கிண்டல் செய்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர். உங்க ரியாக்ஷனை பார்த்தால் அப்படி தெரியலையே, ஏதோ பாத்ரூம் வராம கஷ்டப்படுவது போல இருக்கிறதே என பங்கமாக இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

ஜிப் போடுங்க
இந்த புகைப்படத்தில் யார் யாரோ எதை எதையோ கண்டுபிடித்து விவாதித்து வரும் நிலையில், இந்த குசும்புக்கார நெட்டிசன், முதல்ல ஜிப் போடுங்க அப்புறம் நியூஸ் படிக்கலாம் என கமெண்ட் போட்டு கலாய்த்துள்ளார். மேலும், சில நெட்டிசன்களும், ஜிப் பிரச்சனையை கிளப்பி உள்ளனர்.

ஜூம் பண்ணி பாருங்க
நல்ல ஜூம் பண்ணி பாருங்க, ரைசா ஜிப் போட்டுத் தான் இருக்காங்க, முன்ன பின்ன பேன்ட்ல ஜிப் போடுற பழக்கம் இருந்தா தான உங்களுக்கெல்லாம், நாட்டுல எவ்வளவோ பிரச்சனை போயிட்டு இருக்கு, இப்போ ரைசா ஜிப் போடுறது தான் உங்களுக்கு முக்கியமா என ரைசாவின் தீவிர ரசிகர் ஒருவர், அந்த நெட்டிசனை வெளுத்து வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











