'நீங்க என்னை கல்யாணம் பண்றவரை..' ரைசா வில்சனின் ரொமான்ஸ் கேப்ஷன்.. யாருங்க அவர்? ஃபேன்ஸ் ஷாக்!

By

சென்னை: நடிகை ரைசா வில்சன் கொடுத்துள்ள ரொமான்ஸ் கேப்ஷனை அடுத்து அவர் யாரையோ காதலித்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன். பெங்களுர் மாடல்.

இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு புகைப்படங்களை பதிவிடும் நடிகைகளில் இவர் மட்டும் விதிவிலக்கா என்ன?

பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

பிக்பாஸ்-க்கு முன், சில படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தார் ரைசா. பிறகு, பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார். இளன் இயக்கிய இந்த படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பிறகு வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

சமீபத்திய பேட்டி

சமீபத்திய பேட்டி

அடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருந்த ரைசா, இப்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர், கார்த்திக் ராஜு இயக்கும் தி சேஸ் படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர் என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் ரைசா.

பறவையியல் ஆய்வாளர்

பறவையியல் ஆய்வாளர்

தி சேஸ் படத்தில் பறவையியல் ஆய்வாளராக நடிக்கிறார் என்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தலைகீழாக மரத்தில் தொங்குவதுபோல அந்த போஸ்டர் மிரட்டியது. அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடும் ரைசா, இப்போது சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஈர்க்க வேண்டும்

ஈர்க்க வேண்டும்

இதற்கு கேப்ஷனாக, 'உங்களை எப்படி ஈர்க்க வேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ளும்வரை, நான் உங்களை உற்றுப்பார்த்துக் கொண்டே இருக்க போகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு, யாருங்க அந்த ஆள்? என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர்.

கல்யாண கோரிக்கை

கல்யாண கோரிக்கை

ரைசாவின் தோழி ஒருவர், கற்பனை பண்ணி பார்த்தேன், நீ அதையும் செய்வே? என்று கூறியுள்ளார். பல நெட்டிசன்ஸ், உங்க கேப்ஷனுக்கு நூறு மார்க் என்று தெரிவித்துள்ளனர். பலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர். இதில் சிலர் கல்யாண கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

ஹாலிவுட் போவீங்க

ஹாலிவுட் போவீங்க

இந்த மெசேஜ் யாருக்குன்னு தெரியலையே? என்று சிலர் கேட்டுள்ளனர். சிலர், ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கீங்க, ஒரு நாள் நீங்க நிச்சயம் ஹாலிவுட்டுக்கு போவீங்க என்றும் உங்கள் கண்கள் செம அழகு என்றும் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X