இணையத்தில் தீயாய் பரவும் ரைசா வில்சன் பிகினி வீடியோ
சென்னை : மாடலாக இருந்து நடிக்க வந்தவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்று, பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புக்களை பெற்ற ரைசா, பியார் பிரேம் காதல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் பிக்பாசில் பங்கேற்ற சக போட்டியாளரான ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடித்தார்.
இந்த படம் ரைசாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதனையடுத்து பாலா இயக்கிய வர்மா, காதலிக்க யாருமில்லை, அலைஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவிற்கு ஓய்விற்காக சென்றவர், பிகினியில் எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த போட்டோக்கள் வைரலாகின.
இந்நிலையில் தற்போது, படு கவர்ச்சியான பிகினியில் ரைசா, நீச்சல் குளத்தில் இருந்து வரும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, புயலை கிளப்பி வருகிறது.


Click it and Unblock the Notifications











