தவறான ஃபேசியல்...அலங்கோலமாகி போன ரைசா வில்சனின் முகம்

சென்னை : பிரபல மாடலான நடிகை ரைசா வில்சன், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். அதற்கு பின் துணை நடிகையாக சில படங்களில் நடித்த ரைசா, பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.

Recommended Video

Raiza வுக்கு நடந்தது என்ன? காரணம் யார்? | Dermatological producer

தற்போது காதலிக்க யாருமில்லை, அலைஸ், எஃப்ஐஆர், ஹாஷ்டாக் லவ், தி சேஷ் போன்ற இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது படு கவர்ச்சியான ஃபோட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார் ரைசா.

மாலத்தீவில் கவர்ச்சி ஃபோட்டோஷூட்

மாலத்தீவில் கவர்ச்சி ஃபோட்டோஷூட்

மாலத்தீவில் ஓய்விற்காக சென்ற ரைசா, அங்கு கடற்கரையில் இவர் நடத்திய கவர்ச்சி ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. தொடர்ந்து நீச்சல் குளத்தில் பிகினியில் தோன்றிய இவரது ஃபோட்டோக்கள், வீடியோக்களும் வைரலாகி, பரபரப்பை கிளப்பின.

அதிர்ச்சி கொடுத்த ரைசா

அதிர்ச்சி கொடுத்த ரைசா

இந்நிலையில் அலங்கோலமான முகத்துடன் இருக்கும் தனது ஃபோட்டோவை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரைசா. கண்கள் கருப்பாகி, முகம் வீங்கிய நிலையில் இருக்கும் அந்த ஃபோட்டோவுடன், ஃபேசியல் சிகிச்சைக்காக நேற்று டாக்டர் பைரவி செந்திலிடம் வந்தேன்.

தவறான சிகிச்சை

தவறான சிகிச்சை

எனக்கு தேவையில்லாத சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அதன் விளைவு தான் இது. இன்று என்னை சந்திக்கவோ, என்னுடன் பேசவோ அவர் மறுக்கிறார். ஆனால் அவரிடம் வேலை செய்பவர்களோ அவர் ஊரிலேயே இல்லை என்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார் ரைசா.

சிகிச்சையில் ரைசா

சிகிச்சையில் ரைசா

தற்போது இதற்காக ரைசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரைசாவின் இந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள், விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது போன்று யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஃபோட்டோவையும், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பெயரையம் வெளியிட்டுள்ளதாக ரைசா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X