கொரோனா இல்லாத கிராமத்தில் எடுக்கப்பட்ட படம்.. ரைசா வில்சனின் ‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை: லாக்டவுன் காலத்தில் எந்த படங்களும் ஷூட்டிங் செய்யாத நிலையில், சிறப்பு அனுமதி பெற்று கொரோனாவே இல்லாத கிராமத்தில் இயக்குநர் கார்த்திக் ராஜூ எடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன் லீடு ரோலில் கலக்கி உள்ள இந்த படத்திற்கு 'The Chase' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காட்டில் மரத்தில் கட்டப்பட்டு தலை கீழாக தொங்கவிடப்பட்ட நிலையில் ரைசா வில்சனும் ரத்தம் சொட்ட 'The Chase' டைட்டிலும் ரசிகர்களை மிரள செய்கிறது.

விஜய்சேதுபதி வெளியீடு
திருடன் போலீஸ், உள்குத்து படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், 'கைதி' மோனிகா நடிப்பில் உருவாகி உள்ள 'தி சேஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திருடன் போலீஸ் படத்தில் விஜய்சேதுபதியும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா இல்லாத கிராமம்
லாக்டவுனில் எந்தவொரு படத்திற்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், சின்ன படக்குழுவை வைத்துக் கொண்டு, கொரோனாவே இல்லாத திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் இயக்குநர் கார்த்திக் ராஜூ, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட படக்குழு முடித்துள்ளது.

நயன்தாரா பாணியில்
மாயா, அறம், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் என தமிழ் சினிமாவில் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. நயனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமலா பால், வரலக்ஷ்மி சரத்குமார் என பல நடிகைகளும் லீடு ரோலில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், அதே ரூட்டை வெகு விரைவிலே நடிகை ரைசா வில்சன் கையில் எடுத்துள்ளார்.

அந்த படத்திற்கு முன்பு
இயக்குநர் கார்த்திக் ராஜூ கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக நடிகை ரெஜினா கசாண்ட்ராவை வைத்து சூர்ப்பனகை எனும் பேய் படத்தை இயக்க உள்ளதாக அறிவித்து இருந்தார். அதன் ஷூட்டிங் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே லாக்டவுன் போடப்பட்டதால், படப்பிடிப்பை தொடர முடியவில்லை.

விரைவில் ரிலீஸ்
ஆனால், காலத்தை வீணடிக்காமல், தன்னிடம் இருந்த மற்றொரு த்ரில்லர் கதையை சூர்ப்பனகை படத்தின் தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவிடம் சொல்ல அவருக்கும் பிடித்துப் போனதன் காரணமாக இந்த படம் தற்போது ரெடியாகி உள்ளது. விரைவில் டப்பிங் முடிந்து ஒடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











