பிரபல நடிகருடன் டேட்டிங்.. பிக்பாஸ் நடிகையின் டிவிட்டால் பரபரக்கும் கோலிவுட்!
Recommended Video
சென்னை: பிரபல நடிகருடன் டேட்டிங் செய்யப்போவதாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை பதிவிட்டிருக்கும் டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலையில்லா பட்டதாரி 2வில் சிறு வேடத்தில் நடித்தவர் ரைஸா வில்சன். மாடலான இவர், பிக்பாஸ் முதல் சீசனிஙல் பங்கேற்றார். இதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார் ரைஸா வில்சன்.
அப்போது தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளரான ஹரீஷ் கல்யாணுடன் நல்ல கெமிஸ்ட்ரி வொர்க்கவுட்டானது. இதனை தொடர்ந்து வெளியே வந்த இருவரும் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர்.

பியார் பிரேமா காதல்
இந்நிலையில் கடந்த வாரம் ரிலீஸான தனுசு ராசி நேயர்களே படத்திலும் ரைஸா வில்சன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் நெருங்கி பழகுவதாக பியார் பிரேமா காதல் படத்தின் போதே பேசப்பட்டது.
டேட்டிங் போகிறேன்
இந்நிலையில் ரைஸா வில்சன் பதிவிட்டிருக்கும் டிவிட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழகத்தை மகிழ்விப்பதற்காக நான் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்யப் போகிறேன் என பதிவிட்டிருக்கிறார் ரைஸா.

மூன்று படங்கள்
பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு ரைஸாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர் உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

டைம் லைன்
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரணகளப்படுத்தி வருகிறார் ரைஸா வில்சன். இதனால் தொடர்ந்து டைம் லைனில் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்படி ஒரு டிவிட்டை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











