நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!

சென்னை: தமிழ் சினிமாவில் சில நல்ல படங்களை எடுக்கும் இயக்குநர்களை பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் கமிட் செய்து அவர்களது வாழ்க்கையை காலி செய்து விடுகிறார்கள் என இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தாலாட்டு கேட்குதம்மா படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இவர் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

Raj Kapoor blames Top heroes spoiled good directors like Mari Selvaraj stirs controversy

இயக்குநர் மாரி செல்வராஜை குறிப்பிட்டு ராஜ் கபூர் அப்படி பேசியிருக்கும் நிலையில், எந்த நடிகரை அவர் குறிப்பிடுகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இயக்குநர்களை ஹீரோக்கள் கெடுக்கிறாங்க?: மெட்ராஸ் படத்தை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு கபாலி, காலா என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வாய்ப்புகளை கொடுத்தார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சனுக்கு விஜய் பட வாய்ப்பை கொடுத்தார். பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்றால் கூட ரஜினிகாந்த் அவருக்கு வாய்ப்பு கொடுத்து ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அட்லீ, லோகேஷ் கனகராஜ் என பலருக்கும் உச்ச நடிகர்கள் வாய்ப்புகளை வாரி வழங்கினர். அதன் காரணமாகவே அந்த இயக்குநர்கள் முன்னணி இயக்குநர்களாக வலம் வருகின்றனர்.

ராஜ் கபூர் குற்றச்சாட்டு: 'உழைப்பாளர் தினம்' எனும் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான ராஜ் கபூர் பேசும் போது, கதைக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் கில்லின்னு பேர் வைக்கிறான் என சொன்ன அவர், உழைப்பாளர் தினம் என சரியாக இந்த படத்துக்கு பெயர் வைத்துள்ளனர் எனக் கூறினார். மேலும், மாரி செல்வராஜ் போன்ற நல்ல இயக்குநர்களை பெரிய நடிகர்கள் அழைத்து படம் கொடுக்கிறேன்னு காலி பண்ணிடுறாங்க என பேசியுள்ளார்.

தனுஷா? உதயநிதியா?: பரியேறும் பெருமாள் எனும் நல்ல படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியும் ஹிட் கொடுத்தார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. இந்நிலையில், மாரி செல்வராஜை எந்த நடிகர் அழைத்துச் சென்று காலி செய்தார் என ரசிகர்கள் ராஜ் கபூருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X