ராஜ் குந்த்ராவின் அந்த ஆபாச ட்வீட்.. வைரலாக்கி வச்சு செய்யும் நெட்டிசன்கள் #RajKundraArrest

மும்பை: ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை பாலிவுட் ரசிகர்கள் #RajKundraArrest என்ற ஹாஷ்டேக்கில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ராஜ் குந்த்ரா விஞ்ஞானி நியூட்டன் குறித்து பதிவிட்ட ஆபாச ட்வீட் ஸ்க்ரீன் ஷாட்டையும் ஷேர் செய்து நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

தமிழ் படங்களில்

தமிழ் படங்களில்

பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷில்பா ஷெட்டி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யின் குஷி படத்தில் மெக்கோரீனா பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் திரும்பாத அவர் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

கணவர் கைது

கணவர் கைது

இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா நேற்று இரவு அதிரடியாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆபாச படங்களை தயாரித்து செயலிகள் மூலம் அதனை அவர் வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

காமம் மட்டுமே

காமம் மட்டுமே

#RajKundraArrest என்ற ஹாஷ்டேக்கை போட்டு பாலிவுட் ரசிகர்கள் ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ட்வீட்களையும் ட்ரோல் மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ராஜ் குந்த்ரா பதிவிட்ட ஒரு ஆபாச ட்வீட்டையும் ஷேர் செய்து அவரது எண்ணம் முழுக்க காமம் மட்டுமே நிறைந்திருப்பதாக சுட்டிக் காட்டி வெளுத்து வருகின்றனர்.

ஆபாச ட்வீட்

ஆபாச ட்வீட்

நிர்வாண பெண்ணை பார்த்து நியூட்டன் ஷாக் ஆகியிருப்பார். ஏதோவொன்று புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுகிறதே என பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் ராஜ் குந்த்ரா போட்ட ஏ ஜோக் ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் ராஜ் குந்த்ராவின் முகமூடியை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

ஏக்தா கபூருக்கு போட்டி

ஏக்தா கபூருக்கு போட்டி

ஆல்ட் பாலாஜி ஆப் மூலம் ஏகப்பட்ட ஆபாச வெப்சீரிஸ்களை எடுத்து வெளியிடும் ஏக்தா கபூருக்கே கடும் போட்டியை கொடுத்திருக்காரே ராஜ் குந்த்ரா என்றும் ட்வீட் போட்டு போற போக்கில் ஏக்தா கபூரையும் கைது செய்யுங்க போலீஸ் என சுட்டிக் காட்டி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

எனக்கொரு சான்ஸ்

எனக்கொரு சான்ஸ்

ராஜ் குந்த்ரா மீது வழக்கு தொடர்ந்த ஆபாச பட நடிகை பூனம் பண்டே, இந்த செய்தியை அறிந்த பின்னர், எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க சார் என அவரை சந்திக்க கூட்டத்தோடு கூட்டமாக செல்வார் என்றும் பாலிவுட் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X