கைதாகாமல் இருக்க மும்பை க்ரைம் பிராஞ்சுக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்த குந்த்ரா.. திடுக் தகவல்!

மும்பை: ஆபாச பட வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்கா ஷில்பா ஷெட்டியின் கணவர் மும்பை க்ரைம் பிராஞ்ச் அதிகாரிகளுக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த திங்கள் கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி மாதமே நடிகை ஒருவரின் புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போதிய ஆதாரங்களுக்காக காத்திருந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

கட்டாயப்படுத்தினார்..

கட்டாயப்படுத்தினார்..

ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கட்டாயப்படுத்தி நிர்வாணமாக தங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக மூன்று நடிகைகள் புகார் அளித்ததை தொடர்ந்து ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.

ஆபாச படங்கள் விற்பனை

ஆபாச படங்கள் விற்பனை

மேலும் ராஜ் குந்த்ராவின் உத்தரவின் பேரில் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டது, அவை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 70 ஆபாச படங்களை ராஜ் குந்த்ரா தயாரித்து விற்றதும் தெரிய வந்துள்ளது.

டீலிங் உரையாடல்

டீலிங் உரையாடல்

மேலும் தன்னுடைய பார்ட்னர்களிடம் ஆபாச படங்கள் தொடர்பான டீலிங் உரையாடல்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராதான் முக்கிய குற்றவாளி என்பது தெளிவாகியுள்ளது.

ரூ. 25 லஞ்சம்

ரூ. 25 லஞ்சம்

இந்நிலையில் ஆபாச பட தயாரிப்பு விவகாரத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க மும்பை க்ரைம் பிராஞ்ச் அதிகாரிகளுக்கு ராஜ் குந்த்ரா 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.

ஆபாச படங்கள் ஆய்வு

ஆபாச படங்கள் ஆய்வு

மேலும் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்த சிறிய புரடெக்ஷன் ஹவுஸ்களும் தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ராஜ்குந்த்ராவுக்கு சொந்தமான ஹாட்ஷாட் செயலியில் அப்லோட் செய்யப்பட்ட 90 ஆபாச படங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X