பூனம்,ஷெர்லின் ஆபாச வீடியோவை ஓடிடிக்கு விற்றுள்ளார் ராஜ் குந்தரா..போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்!
மும்பை : ராஜ் குந்த்ரா, ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகியோர் ஆபாச வீடியோக்களை தயாரித்து ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆபாச படங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை கடந்த ஆண்டு மும்பை போலீஸார் கைது செய்தனர்.
ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களை தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராஜ்குந்தரா
கடந்த மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்தார். அந்த புகாரில், வெப் தொடர் எடுப்பதாக கூறி ஏராளமான பெண்களை நடிக்க அழைத்து, அவர்களை பாலியல் படங்களில் நடக்குமாறு ராஜ் குந்த்ரா கட்டாயப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

அதிரடி ரெய்டு
இந்த புகாரையடுத்து, மும்பையில் உள்ள மாலத், மாத் பண்ணை வீட்டில் போலீசார் நடத்தி அதிரடி சோதனை நடத்தினர். இப்போது மாடல் அழகிகள், கேமரா மேன், இயக்குநர் பிரதிபா நலாவாடே ஆகியோரை போலீசார் கைது செய்தனர் இவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ராஜ் குந்த்ரா கைது செய்ப்பட்டார். இந்த விசாரணை இரண்டு மாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜ் குந்தராவுக்கு ஜாமீன் வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றப்பத்திரிக்கை
இவ்வழக்கில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்திய போலீஸார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில்,தொழிலதிபர் ராஜ் குந்த்ரா,ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, தயாரிப்பாளர் மீதா ஜுன்ஜுன்வாலா மற்றும் கேமராமேன்கள் இணைந்து மும்பை புறநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆபாச வீடியோ தயாரித்து அதனை பல்வேறு ஒடிடி தளங்களில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

450 பக்க குற்றப்பத்திரிக்கை
போலீசார் அளித்துள்ள 450 பக்க குற்றப்பத்திரிகையில், ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்து விநியோகம் செய்வதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். 'பிரேம் பக்லானி' என்ற வெப் தொடருக்காக ஆபாச வீடியோவை தயாரித்து பனானா ப்ரைம் ஓடிடிக்கு விற்பனை செய்திருக்கிறார். இந்த குற்றத்தில் சுவாஜித் சவுத்ரி, குந்த்ராவின் ஊழியர் உமேஷ் காமத் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

பூனம் பாண்டே ஆபாச வீடியோ
அதே போல பூனம் பாண்டே தனக்கு என சொந்தமாக தி பூனம் பாண்டே' என்ற செயலியை உருவாக்கி, குந்த்ரா நிறுவனத்தின் உதவியுடன் தனது ஆபாச வீடியோக்களை படமாக்கி, அந்த செயலியில் பதிவேற்றி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குந்த்ராவின் நிறுவனம் இந்த குற்றத்திற்கு உதவியதாகவும், கூறியுள்ளது.

பலருக்கும் தொடர்பு
அதுமட்டுமில்லாமல், ஆபாச வீடியோக்கள் அல்லது வெப் சீரிஸில் நடித்த மாடல்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். உமேஷ் காமத் லண்டனைச் சேர்ந்த ஹாட்ஷூட் என்ற நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். ஹாட்ஷூட் நிறுவனம் ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமானது. இந்த ஹாட்ஷூட் மொபைல் ஆப்பில்தான் ராஜ் குந்த்ரா அதிகமான ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தார் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











