சல்மான் கான் சம்பளம் பற்றி பேசி ரசிகர்களிடம் 'டோஸ்' வாங்கிய நடிகை ஷில்பாவின் கணவர்
மும்பை: நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை சல்மான் ஒரு படத்தில் நடித்து சம்பாதிக்கிறார் என்று நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழில் அதிபரான ராஜ் குந்த்ரா. அவர் தேவையில்லாமல் சல்மான் கானின் சம்பளத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது தான் தற்போது அவருக்கு வினையாகிவிட்டது.
அவர் அப்படி என்ன பேசி சல்மானின் ரசிகர்களிடம் டோஸ் வாங்கினார் என்று பார்ப்போம்.

சம்பளம்
சல்மான் கான் என்னை போன்று சம்பாதிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் என் அளவுக்கு சம்பாதிக்கவில்லை என்றார் ராஜ்.

ஒரு மாதம்
நான் ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் பணத்தை தான் சல்மான் கான் ஒரு படத்தில் நடித்து வாங்குகிறார். வேண்டும் என்றால் சல்மானிடமே கேளுங்கள் என்று தெரிவித்தார் ராஜ்.

தயாரிப்பு
நடிப்பது எனக்கு ஒத்து வராது. என் மனைவி இந்த துறையில் இருப்பதால் நான் படங்களை தயாரிக்கிறேன் என்று ராஜ் குந்த்ரா தெரிவித்தார்.

டோஸ்
ராஜ் குந்த்ராவின் பேட்டியை பார்த்த சல்மான் ரசிகர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது. அந்த ஆளு யார் சல்மானின் சம்பளத்தை பற்றி பேச என்று ட்விட்டரில் ராஜ் குந்த்ராவை கண்டமேனிக்கு வசைபாடிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











