twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹென்றி இயக்கத்தில் தந்தை, மகள் பாசத்தை சொல்லும் ராஜாமகள்

    |

    சென்னை : க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணிஅமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

    என்னங்க இது... புகைப்பட கலைஞராக மாறிய அஜித்... புகைப்படம் வெளியிட்ட யோகி பாபு என்னங்க இது... புகைப்பட கலைஞராக மாறிய அஜித்... புகைப்படம் வெளியிட்ட யோகி பாபு

    பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

    பாச போராட்டத்தை

    பாச போராட்டத்தை

    அதே நேரம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தையும் ஒருங்கே இணைத்து, அழகான கலகலப்பான படமாக உருவாகியிருக்கிறார் இயக்குனர் ஹென்றி.முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டாரங்களிலும், மகாபலிபுரம், திருத்தணி, போன்ற பகுதிகளிலும், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

    பின்னணி வேலைகள்

    பின்னணி வேலைகள்

    தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
    விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அப்பா மகள் என்று பல படங்கள் வந்து இருந்தாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல்

    மிகவும் எதார்த்தமாக

    மிகவும் எதார்த்தமாக

    நிறைய ஹாலிவுட் மற்றும் பல மொழிகளில் அப்பா மகள் பாசத்தை வலியுறுத்தி நிறைய கதைகள் வந்து உள்ளது . இந்த படம் நம் கலாச்சாரம் ,நம் நாட்டின் அன்றாட வாழ்வியலை கொண்டு மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்டு உள்ளது என்பது தான் கூடுதல் சிறப்பு.

    மிக முக்கியமான படமாக

    மிக முக்கியமான படமாக

    முருகதாஸ் நிறைய வித்யாசமான கதாபாத்திரங்கள் செய்து உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . அந்த வகையில் இந்த படம் முருகதாசுக்கு ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை . நல்ல கதை உள்ள படங்களை கண்டிப்பாக தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து மகிழ்வார்கள் என்று நம்புவோம்

    English summary
    Hendri directing Raja magal movie will tell about the bonding between father and daughter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X