முந்தானை மூடும் ராணி.. பின்றான்பா.. பின்றான்பா.. ராஜ ராஜ சோழன் வடிவேலு வெர்ஷன் வேறலெவல்!
சென்னை: வடிவேலு வெர்ஷன் என சினிமா பாடல்களை சூப்பர் ட்ரோல் வீடியோவாக மாற்றி ரசிக்க வைத்து விடுகின்றனர் ரசிகர்கள். தங்களுக்குள் இருக்கும் எடிட்டிங் திறமையை தலைவன் வைகைப் புயலை வைத்து எடிட் செய்து வேறலெவலில் மாஸ் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில், விஸ்வாசம் படத்தின் "கண்ணான கண்ணே" பாடல் எடிட் செய்யப்பட்டு டிரெண்டான நிலையில், தற்போது "ராஜ ராஜ சோழன் நான்" பாடலின் வடிவேலு வெர்ஷன் தீயாக பரவி வருகிறது.

பாடல் வரிகளுக்கு ஏற்ப வடிவேலு காமெடிகளை மிக்ஸ் செய்துப் போட்டு பார்த்த உடனே குபீர் என சிரிக்க வைத்து விடுகின்றனர்.
காமெடி படங்களிலேயே சிரிப்பு வரல: சமீப காலமாக காமெடி படங்கள் எடுக்கிறோம் என்கிற பெயரில் கிரிஞ்சு தான் செய்து வருகின்றனரே தவிர காமெடியும் இல்லை என்றும் அதை பார்த்தால் சிரிப்பு வராமல் கோபம் தான் வருகிறது என ரசிகர்கள் கடுப்பாகி விடுகின்றனர். ஆனால், இதுபோன்ற ஒரு சின்ன எடிட் வீடியோவில் ரசிகர்கள் செலுத்தும் அக்கறையை காமெடி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள் ஏன் செய்வதில்லை என்கிற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகின்றனர்.
உள்ளூர பாயுமே: வடிவேலுவின் காமெடிகளை மிக்ஸ் எடிட் செய்து ராஜ ராஜ சோழன் நான் பாடலுக்கு பயன்படுத்திய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் வின்னர் படத்தில் குட்டி சைக்கிளை எடுத்து வந்து காலை அகட்டிக் கொண்டு படுத்திருக்கும் வடிவேலுவின் மர்ம உறுப்பை பதம் பார்க்கும் அந்த காட்சிக்கு உள்ளூர பாயுமே வரிகளை எடிட் செய்து குபீரென சிரிக்க வைத்து விட்டனர்.
முந்தானை மூடும் ராணி: இந்த வரிகளுக்கெல்லாம் வடிவேலு பட காமெடி காட்சிகளில் சீன் இருக்குமா என எப்படித்தான் சிந்தித்து சிங்க் பண்றாங்களோ தெரியவில்லை என அந்த முந்தானை மூடும் ராணி வரிகளுக்கு போட்ட பிட்டை பார்த்ததும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வடிவேலு படங்களில் சமீப காலமாக காமெடி குறைந்தாலும், அவர் ஏற்கனவே கிரியேட் செய்து வைத்த காமெடி காட்சிகளை திருப்பி பார்த்தாலே ரசிகர்கள் வாய் விட்டு சிரித்து நோயின்றி வாழலாம்!


Click it and Unblock the Notifications











