சின்னத்திரையில் கலக்கியாச்சு.. அடுத்தது வெள்ளித்திரைதான்.. ராஜா ராணி 2 சீரியல் நாயகனின் சபதம்!

சென்னை : சின்னத்திரையில் சீரியல் மூலம் ரசிகர்களின் பேவரிட்டாக வலம்வரும் சித்து சித், விரைவில் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.

Recommended Video

Mic Mohan | Majestic Look நடிகர் மோகன் பிறந்த நாள் Special | *Rewindraja

திருமணம் என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார்.

சீரியலில் நடிப்பதற்கு முன்னதாக சுமார் 6 ஆண்டுகள் இவர் நடனக் கலைஞராக இருந்து அதன்பின்பே திருமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்.

தனி முத்திரை

தனி முத்திரை

முன்பெல்லாம் சீரியல் நடிகர்கள் என்று தனி முத்திரைக் குத்தப்பட்டு நடிகர்கள் இருந்தனர். சின்னத்திரை, பெரியத்திரை என்று தனித்தனியாக நடிகர்கள் அடையாளம் காணப்பட்டனர். தற்போது யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடிக்க வாய்ப்பு பெறுவது என்பது நடைமுறைக்கு வந்து விட்டது. முன்பெல்லாம் சீரியல் நடிகர்கள் என்று தனி முத்திரைக் குத்தப்பட்டு நடிகர்கள் இருந்தனர். சின்னத்திரை, பெரியத்திரை என்று தனித்தனியாக நடிகர்கள் அடையாளம் காணப்பட்டனர். தற்போது யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடிக்க வாய்ப்பு பெறுவது என்பது நடைமுறைக்கு வந்து விட்டது.

சிறப்பான அடையாளம்

சிறப்பான அடையாளம்


அந்த வகையில் சீரியல் நடிகர்களாக இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து நீண்ட போராட்டங்களுக்கு பின்பு தங்களை சிறப்பாக அடையாளப்படுத்தியுள்ளனர் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர். இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வழி சிறிதல்ல. தற்போது சின்னத்திரையில் நடிப்பதே சினிமாவில் நடிப்பதற்கான எளிதான வழியாக மாறியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை

தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை

அந்த வகையில் ஷிவாங்கி, பால சரவணன், புகழ், ரக்ஷன் என சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிவரும் நடிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் யூடியூப் போன்றவற்றின்மூலமும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

வரிசையில் இணையும் சித்து சித்

வரிசையில் இணையும் சித்து சித்

அந்த வரிசையில் தற்போது இணையவுள்ளார் சின்னத்திரை நடிகர் சித்து சித். திருமணம் என்ற தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ரசிகர்களின் பேவரிட்டாகவும் மாறியுள்ளார். இந்த இடத்தை பிடிக்க இவர் சுமார் 6 ஆண்டுகள் கடுமையான உழைப்பை தந்துள்ளார்.

6 ஆண்டு போராட்டம்

6 ஆண்டு போராட்டம்

சுமார் 6 ஆண்டுகள் நடனக் கலைஞராக இருந்த சித்து சித்திற்கு வெளிச்சம் கொடுத்தது திருமணம் சீரியல்தான். தொடர்ந்து தற்போது ராஜா ராணி 2 சீரியல் ஹீரோ இவர். இவரது சீரியல்கள் எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் சிறப்பான முன்னேற்றம் பெற்று வருகின்றன. இதையடுத்து இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சினிமா வாய்ப்புகள்

சினிமா வாய்ப்புகள்

சின்னத்திரையில் தன்னை சிறப்பாக நிரூபித்துள்ள சித்து சித்திற்கு அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதையடுத்து விரைவில் இவர் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X