ஆட்டம் பாட்டம் கொண்டாடத்தில் ராஜா ராணி 2 டீம்...அட காரணம் இதுதானா ?

சென்னை : விஜய் டிவி.,யில் 2017 ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது ராஜா ராணி 2 சீரியல். ஆல்யா மானசா ஹீரோயினாக நடிக்கிறார். குழந்தை பிறந்த பிறகு அவர் கமிட்டான சீரியல் இது.

Raja Rani 2 serial team celebrate 200 th episode of serial

இந்தியில் ஒளிபரப்பான Diya Aur Baati humm என்ற சீரியல், தமிழில் அப்படியே டப் செய்யப்பட்டு, என் கணவன் என் தோழன் என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பப்பட்டது. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த சீரியலின் கதை தான் தற்போது ராஜா ராணி 2 என்ற பெயரில் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவி சீரியல்களில் அதிக ரேட்டிங்கை பெற்ற சீரியல்களில் ராஜா ராணி 2 இரண்டாம் இடத்தில் உள்ளது. குழப்பங்கள், பிரச்சனைகள் என விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது ராஜா ராணி 2 சீரியல்.

இந்நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகர் ஒன்றாக இணைந்து, குடுக்கு பொட்டிய குப்பாயம் என்ற மலையாள பாடலை பாடி, குத்தாட்டம் போட்ட வீடியோ நேற்று வெளியானது. வழக்கமாக ஆலியா மானசா தான் செட்டில் இருந்து ரீல் வீடியோக்களை வெளியிடுவார். ஆனால் இப்போது நடிகர்கள் அனைவரும் சேர்ந்து நடனமாடி உள்ளனர்.

காரணம் என்னவென்று விசாரித்தால், ராஜா ராணி 2 சீரியல் 200 வது எபிசோட்டை எட்டி விட்டதாம். அதை தான் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி உள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X