சேதி தெரியுமா.. ராஜாவுக்கும் ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. சீக்கிரமே டும் டும் டும்!
ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானஸாவுக்கும், சஞ்சீவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
Recommended Video
சென்னை: ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானஸாவுக்கும், சஞ்சீவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
ரீல் ஜோடிக்கள், ரியல் ஜோடிகளாக மாறுவது தமிழ் சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் புதிதல்ல. திரையில் ஜோடியாக நடித்தவர்கள், நிஜத்திலும் தம்பதிகளாக மாறுவதை மக்கள் பெரிதும் ரசிக்கின்றனர்.
அந்தவகையில், சின்னத்திரை வட்டாரத்தில் மக்களிடம் பெரும் அபிமானத்தைப் பெற்ற ஜோடி தான், ராஜா ராணி சீரியலில் நாயகன், நாயகியாக நடித்து வரும் ஆல்யா மானஸா, சஞ்சீவ் ஜோடி.

செம்பா - கார்த்திக்:
சீரியலில் அவர்கள் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக நடித்து வருகின்றனர். அதில் அவர்களின் கெமிஸ்டரியைப் பார்த்து நிஜத்திலும் அவர்கள் மேட் பார் ஈச் அதர் என ரசிகர்கள் கூறி வந்தனர். அதனை மெய்ப்பிப்பது போல், அவர்களும் நிஜமாகவே காதலிக்கத் தொடங்கினர்.

பிரமாண்ட நிச்சயதார்த்தம்:
சும்மா விடுமா விஜய் டிவி. தற்போது அவர்களுக்கு பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் செய்து வைத்து அசத்தியுள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்த செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கும் இதே போல் நிச்சயதார்த்தம் வைத்து விஜய் டிவி அசத்தியது நினைவு கூரத்தக்கது.

சர்ப்பிரைஸ்:
தற்போதும் அதே போல், விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் ஆல்யாவுக்கும், சஞ்சீவுக்கும் மோதிரம் மாற்றி, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் இது தொடர்பான தகவல்களை ரசிகர்களுக்கு சர்ப்பிரைசாக வைத்துள்ளது நிர்வாகம்.

அழகிய ஆல்யா:
ஆனாலும், விருது வழங்கும் விழா நிகழ்ச்சி புரோமோக்களில் அழகிய வெள்ளை உடையில் ஆல்யா நிற்பது போலவும், அவருக்கு சஞ்சீவ் மோதிரம் அணிவிப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அவர்களது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











