Don't Miss!
- News
இரண்டே நாள் தான் இருக்கு.. மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பது எப்படி.. ரொம்பவே ஈஸி! எப்படி தெரியுமா
- Lifestyle
ஆண்களின் நிம்மதியை கெடுக்கும் அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள் என்ன தெரியுமா?
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்ன வக்ரமான புத்தி..இணையத்தில் வெளியான ஆபாச போட்டோக்கள்.. போலீசில் புகார் அளித்த சீரியல் நடிகை!
சென்னை : சீரியல் நடிகை தன்னையும் தனது மகளின் போட்டோக்களை மாஃபிங் செய்து ஆபாசமாக சித்தரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை பிரவீனா 1992 ஆம் ஆண்டு கௌரி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
இந்த படத்தைத் தொடர்ந்து ராஜதந்திரம், கலியூஞ்சல் போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதையும், சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
நான்
அம்மாவாகப்
போறேன்..குட்
நியூஸ்
சொன்ன
நடிகை
பூர்ணா..மகிழ்ச்சியில்
ரசிகர்கள்!

ராஜா ராணி சீரியல்
தமிழ்,மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள பிரவீனா தற்போது விஜய்தொலைக்காட்சியில் பரபரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சந்தியாவின் மாமியாராக சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திங்கள் முதல் சனி வரை தினமும் 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பிரவீனாவின் கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியமானது.

போலீசில் புகார்
இந்நிலையில் நடிகை பிரவீனா, சைபர் கிரைம் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கடந்த ஆண்டு என் போட்டோ ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் வெளியானதை அடுத்து, போலீசில் புகார் கொடுத்திருந்தேன் நான் கொடுத்த புகாரின் பேரில், பாக்யராஜ் என்ற மாணவனை டெல்லி போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த மாணவன் ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

என்ன வக்ரமான புத்தி
வெளியே வந்த அந்த நபர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தனது போட்டோக்களையும் தனது மகள்,அம்மா,சகோதரியின் போட்டோக்களையும் ஆபாசமாக சித்தரித்து தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறான். அவன் வக்ரமாகவும் மன நோயாளியாகவும் இருக்கிறான் அவன் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை பிரவீனா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை பிரவீனா போட்டோக்களை மாஃபிங் செய்து இணையதளங்களில் வெளியிடப்படுவதாக போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல படங்களில்
நடிகை பிரவீனா தற்போது தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், கார்த்தியுடன் தீரனின் அதிகாரம் ஒன்னு, ஆர்யாவின் டெடி, சாமி 2, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல சன் தொலைக்காட்சியில் மகராசி, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்துள்ளார்.