Rajamouli - நடிகராக களமிறங்கும் ராஜமௌலி.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Rajamouli (ராஜமௌலி) பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி நடிகராக களமிறங்கியிருக்கிறார். அதுகுறித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியை புகழ்ந்த மணிரத்னம்: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. மணிரத்னமேகூட, பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rajamouli Acted in oppo mobile phone advertisement

வசூலை அள்ளிய பாகுபலி: ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது. 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஆஸ்கரில் ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார். ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார்.

நடிகர்: இந்நிலையில் ராஜமௌலி நடிகராக களமிறங்கியிருக்கிறார். அதாவது பிரபல மொபைல் ஃபோன் நிறுவனமான 'OPPO' நிறுவனத்தின் விளம்பரத் தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'OPPO' மொபைல் விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X