அந்த அர்ப்பணிப்பு இருக்கே... அது எங்களுக்கு அதிர்ஷ்டம்... பிரபல ஹீரோவை பாராட்டித் தள்ளிய ராஜமவுலி!

By

சென்னை: பிரபல இந்தி நடிகரின் அர்ப்பணிப்பை, இயக்குனர் ராஜமவுலி பாராட்டியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது இரத்தம் ரணம் ரெளத்திரம்.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர்

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி. ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஆலியா பட்

ஆலியா பட்

இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், ராம்சரண் தேஜா ஜோடியாக நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் குரலில் அட்டகாசமாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ராம்சரணின் அறிமுகக் காட்சி சமீபத்தில் வெளியானது. அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இந்தி பதிப்பு காட்சியை வெளியிட, தெலுங்கு வெர்ஷனை ராம்சரண் மற்றும் ராஜமவுலி வெளியிட்டனர்.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

தமிழ்ப் பதிப்பை ஜூனியர் என்.டி.ஆர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மோஷன் போஸ்டரையும் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பேசப்பட்ட வசனமும் அமர்க்களமாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

வியக்க வைக்கிறது

வியக்க வைக்கிறது

இந்நிலையில், இந்தப் படத்தின் ஷுட்டிங்கில் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கனின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார், இயக்குனர் ராஜமவுலி. அவர் கூறும்போது, 'அஜய்தேவ்கன் மிகவும் எளிமையாக இருக்கிறார். அவரது பணிவு, அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. தனது ஷாட் முடிந்தாலும் அவர் கேரவனுக்கு செல்வதில்லை. செட்டிலேயேதான் இருப்பார்.

எங்களுக்கு அதிர்ஷ்டம்

எங்களுக்கு அதிர்ஷ்டம்

அவரது ஷெட்யூலின் கடைசி நாளில், நேரம் கருதி நாங்கள் வேகமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். பிரேக் இல்லாமல் ஷூட்டிங் நடந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டு, செட்டிலேயே மதிய உணவைச் சாப்பிட்டார். அஜய் தேவ்கன் போன்ற ஒரு பிரபலமான நடிகருடன் பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X