Rajamouli - கல்கி படக்குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி.. எப்போது பதில் வருமோ?
ஹைதராபாத்: Kalki (கல்கி) பிரபாஸ் நடிக்கும் கல்கி படக்குழுவிடம் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி கேட்டிருக்கும் கேள்வி ட்ரெண்டாகியுள்ளது.
தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த பிரபாஸ் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

அடையாளம் இல்லை: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. படத்தை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ்.
புராஜெக்ட் கே என்ற கல்கி: இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இதில் பிரபாஸ் மட்டுமின்றி கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் கமிட்டாகியிருக்கின்றனர். படத்துக்கு முதலில் புராஜெக்ட் கே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. கமல் ஹாசன் வில்லனாக இதில் நடிப்பதற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
கல்கி: புராஜெக்ட் கே என்று அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கடுமையாக ட்ரோல் செய்த ரசிகர்கள் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
ராஜமௌலி கேள்வி: இந்நிலையில் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த பாகுபலி இயக்குநர் ராஜமௌலி அதனை பாராட்டி படக்குழுவிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகப்பெரிய வேலை நாகி மற்றும் வைஜெயந்தி மூவிஸ். ஒரு உண்மையான எதிர்காலத்தை நோக்கிய திரைப்படத்த உருவாக்குவது ரொமப்வே கடினம். அதை சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சம் இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது" என குறிப்பிட்டிருக்கிறார்.
கமல் ஹாசன் ரசிகர்கள் வருத்தம்: இதற்கிடையே படத்தில் வில்லனாக நடிக்க கமல் ஹாசன் கமிட்டாகியிருப்பதால் க்ளிம்ப்ஸ் வீடியோவில் அவரது ப்ரெஸென்ஸும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்தக் காட்சியும் க்ளிம்ப்ஸில் இல்லை. எனவே ஆண்டவரின் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமடிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











