Rajamouli Net Worth: பெயரை போலவே ராஜ வாழ்க்கை!.. 50 வயதான ராஜமெளலி.. சொத்து மட்டும் இத்தனை கோடியா?

ஹைதராபாத்: உலகளவில் பிரபலமான இந்திய இயக்குநர்களில் சமீபத்தில் அனைத்து ஹாலிவுட் இயக்குநர்கள் பார்வையும் கவர்ந்து ராஜ நடை போட்டு வரும் ராஜமெளலி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதுவரை 12 படங்களை இயக்கி உள்ள ராஜமெளலி நான் அடிச்ச 12 பேரும் பெரிய கேங்ஸ்டர் என சொல்லும் அளவுக்கு அவர் எடுத்த 12 படங்களும் இந்தியளவில் அல்ல உலகளவில் பிளாக்பஸ்டர் ஆன படங்கள் என்றே சொல்லலாம்.

Rajamouli celebrates his 50th birthday today, here we look about his salary and net worth details

இயக்குநர் ராஜமெளலி ஒரு படத்துக்கு தற்போது 50 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

ராஜாங்க படங்களின் ராஜா: பிரபல கதையாசிரியர் விஜேய்ந்திர பிரசாத் மற்றும் ராஜ நந்தினி தம்பதியினருக்கு மகனாக 1973ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பிறந்த ராஜமெளலி ஆரம்பத்தில் பிரபல எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவிடம் அசிஸ்டன்ட்டாக தான் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 20 வயதில் சினிமா பக்கம் அப்பாவின் திட்டுக்களுக்கு பயந்து சினிமாவில் ஏதோ ஒரு சின்ன வேலையை செய்தால் போதும் என்று தான் உள்ளே நுழைந்திருக்கிறார்.

Rajamouli celebrates his 50th birthday today, here we look about his salary and net worth details

எதற்குமே உருப்படமாட்ட, லாயக்கில்லாதவன் என அடிக்கடி தன்னை தனது அப்பா திட்டுவார் என்றும் ரொம்ப நாள் கழிச்சுத் தான் இயக்கத்தை கற்றுக் கொண்டு இயக்குநர் ஆனேன் என பேட்டி ஒன்றில் ராஜமெளலியே கூறியுள்ளார். ஆனால், இப்போ ராஜாங்க படங்களை இயக்க உலகத்திலேயே இவர் போல ஒரு ஆள் இல்லை என்கிற லெவலுக்கு உயர்ந்துள்ளார்.

12 படங்கள்: ஜூனியர் என்டிஆர் நடித்த ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் 2001ம் ஆண்டு இயக்குநராக மாறினார் ராஜமெளலி. அடுத்த படமும் ஜூனியர் என்டிஆரை வைத்து சிம்மத்ரி என எடுத்தார். நிதின் மற்றும் ஜெனிலியா நடித்த சை படத்தை இயக்கிய ராஜமெளலி 4வது படத்தில் டார்லிங் பிரபாஸ் உடன் கைகோர்த்து சத்ரபதி படத்தைக் கொடுத்தார்.

Rajamouli celebrates his 50th birthday today, here we look about his salary and net worth details

அதன் பின்னர், பிளாக்பஸ்டர் இயக்குநராக மாறிய ராஜமெளலி விக்ரமர்குடு, யமடோங்கா, மகதீரா என மாஸ் காட்ட ஆரம்பித்தார். ராம்சரணின் மகதீரா படம் இந்தியளவில் இமாலய ஹிட் அடித்த நிலையில், நான் ஈ திரைப்படம் இவரது விஷுவல் வேறலெவலில் இருப்பதை உணர்த்தியது. மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்து பாகுபலி 1 மற்றும் 2 படங்களை கொடுத்து உலகையே பிரம்மிக்க வைத்த ராஜமெளலி ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ஆஸ்கர் விருது கெளரவத்தை அடைந்தார். அடுத்து மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளார்.

சொத்து மதிப்பு: இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர் என்றால் ராஜமெளலி தான் என்கின்றனர். 50 முதல் 60 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பல கோடி மதிப்பில்ல பங்களாவை 2008ல் வாங்கியுள்ளார். 1.5 கோடி மதிப்பிலான பிஎம்டபுள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 158 கோடி ரூபாய்க்கு சொத்துக்காரராக ராஜமெளலி திகழ்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X