»   »  எம்.ஜி.ஆரைக் காட்டி சத்யராஜிடம் வேலை வாங்கிய "பாகுபலி" ராஜமெளலி!

எம்.ஜி.ஆரைக் காட்டி சத்யராஜிடம் வேலை வாங்கிய "பாகுபலி" ராஜமெளலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வசூலில் சாதனை படைத்து வரும் பாகுபலி படத்தையும், எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது.

Select City
Buy Baahubali - The Beginning (Tamil) (U/A) Tickets

இப்போது பாகுபலி செய்யும் வசூல் சாதனையை, அப்போதைய மதிப்பில் அடிமைப்பெண் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரண்டு படங்களின் கதையும் ஏறக்குறைய தாயை மீட்டெடுக்கும் மகனைப் பற்றிய கதை தான்.


இந்நிலையில், பாகுபலி படத்திற்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


பாகுபலி...

பாகுபலி...

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இப்படத்தின் முதல்பாகம் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு வெளியாகிறது.


சுவாரஸ்யமான சம்பவம்...

சுவாரஸ்யமான சம்பவம்...

இந்நிலையில், பாகுபலி படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரிய வந்துள்ளது. அதாவது மக்கள் முதன்முறையாக பாகுபலியைப் பார்க்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.


சத்யராஜ் நாத்திகர்...

சத்யராஜ் நாத்திகர்...

அப்போது கடவுளைத் திடீரென்று பார்த்தால் எப்படி பரவசப் படுவீர்கள் என மற்றவர்களிடம் கூறி, அக்காட்சிகளை ராஜமௌலி படமாக்கி விட்டார். ஆனால், சத்யராஜோ நாத்திகர். அவரிடம் இந்த டிரிக் வேலை செய்யாது.


எம்.ஜி.ஆர். வந்தால்...

எம்.ஜி.ஆர். வந்தால்...

என்ன செய்வதென்று யோசித்த இயக்குநர், ‘திடீரென ஒரு கிராமத்திற்குள் எம்.ஜி.ஆர். வந்தால், அந்த கிராம மக்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும். அப்படி ஒரு ரியாக்‌ஷன் வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.


தீவிர ரசிகர்...

தீவிர ரசிகர்...

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ், ராஜமௌலி கூறியபடியே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, அந்தக் காட்சியில் அசத்தலாக நடித்துக் கொடுத்தாராம்.


வெற்றியின் ரகசியம்...

வெற்றியின் ரகசியம்...

இப்படி, தனித்தனியாக நடிகர்களுக்குத் தக்கபடி வேலை வாங்கியதால் தான் இவ்வளவு பிரம்மாண்டமாய் பாகுபலியை திரையில் காட்டுவது ராஜமௌலிக்கு சாத்தியமாயிற்று என படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.


English summary
In Baahubali shooting director Rajamouli explained and convinced actor Sathyaraj by quoting MGR's name for a scene.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil