ராஜமவுலி படத்தில் பிரசாந்த் ஹீரோ? எப்படிக் கிளம்பியது இந்த செய்தி?

ஈ படத்துக்குப் பிறது இப்போது பாஹுபாலி என்ற தெலுங்குப் படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம் இது. மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். டகுபதி ராணா பவர்புல் வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ் - தெலுங்கில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்குவதாகவும், அதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. பிரசாந்த் ஜோடியாக சோனம் கபூர் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இயக்குநர் ராஜமவுலியோ... அப்படி எந்த ஐடியாவும் இல்ல.. எப்படிக் கிளம்பியது இந்த செய்தி என்றே புரியவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











