»   »  ராஜமவுலி படத்தில் 3 சூப்பர் ஸ்டார்கள்: இது இது தாங்க தெறி கூட்டணி

ராஜமவுலி படத்தில் 3 சூப்பர் ஸ்டார்கள்: இது இது தாங்க தெறி கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜமவுலி தனது அடுத்த படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோரை வைத்து பாகுபலி படத்தை எடுத்து உலக ரசிகர்களை மிரள வைத்தவர் ராஜமவுலி. அவர் இயக்கியுள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது.

படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி 2 படத்திற்கு பிறகு மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து பிரமாண்ட படத்தை இயக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தில் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது முடிவாகிவிட்டதாம்.

ரஜினி

ரஜினி

ராஜமவுலியின் அடுத்த படத்தில் 3 சூப்பர் ஸ்டார்கள் நடிக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல நம்ம ரஜினிகாந்த், மோகன்லால், ஆமீர் கான் ஆகியோர் தான்.

ஹிட்

ஹிட்

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான கபாலி ஹிட்டானது. மோகன்லாலின் புலிமுருகன் மல்லுவுட்டில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. ஆமீர் கானின் தங்கல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

ஓமைகாட்

ஓமைகாட்

3 சூப்பர் ஸ்டார்கள் சேர்ந்தால் இந்த படம் நிச்சயம் மெகா ஹிட் தான் என்கிறார்கள் ரசிகர்கள். ஆமீர் கானின் ஒவ்வொரு படமும் ரிலீஸாகும்போது வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Rajamouli is planning to direct a movie with Rajinikanth, Mohanlal and Aamir Khan after Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil