Rajamouli: பிரபாஸ், கமலுடன் இணையும் ராஜமெளலி... ப்ராஜெக்ட் கே படத்தில் திடீர் மாற்றமா..?
ஹைதராபாத்: பிரபாஸ், கமல் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜக்ட் கே. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், ராணா, பசுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ப்ராஜக்ட் கே படத்தின் டைட்டில் கல்கி 2898 கி.பி என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கி வரும் இந்தப் படம் ராஜமெளலி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ராஜெக்ட் கே-வில் இணையும் ராஜமெளலி: பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டின் போது, ப்ராஜெக்ட் கே டைட்டிலையும் படக்குழு அறிவித்தது. அதன்படி இந்தப் படத்துக்கு கல்கி 2898 ஏடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அவருக்கு வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசனும், முக்கியமான கேரக்டர்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் டோலிவுட் ஹீரோ ராணா, மல்லுவுட் ஹீரோ துல்கர் சல்மான் ஆகியோரும் கல்கி திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இயக்குநர் ராஜமெளலி இணைந்துள்ளதாக அவரே கூறியுள்ளார். மகேஷ்பாபுவின் புதிய படத்தை இயக்கவுள்ள ராஜமெளலி, அதற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளில் பிஸியாக உள்ளார். இதனிடையே கல்கி படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடிக்க ராஜமெளலியை அணுகியுள்ளது படக்குழு. அவரும் உடனடியாக ஓக்கே சொல்லிவிட்டாரம். ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஒரு பாடல் காட்சியில் ரகளையாக என்ட்ரி கொடுத்திருந்தார் ராஜமெளலி.
அதனால், கல்கி படத்திலும் அவருக்கு தரமான ஒரு கேரக்டரை கொடுத்துள்ளாராம் நாக் அஸ்வின். பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது ராஜமெளலி தான். இந்நிலையில், பிரபாஸுக்காகவே கல்கி படத்தில் ராஜமெளலி இணைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த கேரக்டர் குறித்து கல்கி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், ரானா, தீபிகா படுகோன், துல்கர் சல்மான் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் நிலையில், ராஜமெளலியும் இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த கேரக்டர் ராஜமெளலியின் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கல்கி படத்தில் கமலின் போர்ஷன் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











