மகேஷ்பாபுவுடன் இணையும் படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. ராஜமௌலி வாழ்றாரே ப்பா

ஹைதராபாத்: ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியடைந்த அப்படத்துக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தினார். ஆர்ஆர்ஆர் படத்தை முடித்த பிறகு இப்போது மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கிவரும் அவர் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் பிரமாண்டமான இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ராஜமௌலி. ஈயை வைத்து ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர் அவர். அதனையடுத்து பாகுபலி படத்தை இயக்கிய அவர் இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராக மாறினார். அந்தப் படம்தான் தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் இயக்கிய பாகுபலி 2 படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ராஜமௌலியின் கரியரை உச்சக்கட்டத்தில் கொண்டு சென்று நிறுத்தியது.

ஆர்ஆர்ஆர்: பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட்டானதை அடுத்து ராஜமௌலியின் இயக்கம் என்றாலே கோலிவுட், பாலிவுட் உள்ளிட்ட திரைத்துறைகளில் பலத்த எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது. சூழல் இப்படி இருக்க ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோரை வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார் அவர். அந்தப் படமும் இந்திய அளவில் மெகா ஹிட்டானது. மேலும் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் அந்தப் படம் வசூல் செய்து தெலுங்கு சினிமாவின் வணிகத்தை மேலும் உயர்த்தியது.

Rajamouli Got 200 Crores Salary For Mahesh Babu Movie
Photo Credit:

குவிந்த விருதுகள்: வணிக ரீதியாக மெகா ஹிட்டான அந்தப் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படித்தான் ரெஸ்பான்ஸை பெற்றது. முக்கியமாக ஹிந்துத்துவா சிந்தனையை அடிப்படையாக வைத்துதான் அப்படத்தை ராஜமௌலி இயக்கினார் என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினார்கள். எது எப்படி இருந்தாலும் படத்துக்கு தேசிய விருது முதல் ஆஸ்கர் விருதுவரை கிடைத்தது. படத்துக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: இந்திய அளவில் மட்டும் அறியப்பட்டுக்கொண்டிருந்த ராஜமௌலியை ஆர்ஆர்ஆர் படம் உலகளவில் அடையாளப்படுத்தியது. இதனையடுத்து அவர் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது. அதன்படி மகேஷ் பாபுவை வைத்து அவர் படம் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியின் சம்பளம்: படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதுகுறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகின. இந்நிலையில் இப்படத்துக்காக ராஜமௌலி வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.அதன்படி அவர் இப்படத்துக்காக அவர் 200 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு எந்த இயக்குநர்கள்: முன்னதாக இந்திய அளவில் ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் உள்ளிட்டோர் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களாக இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து அட்லீ ஹிந்தியில் சென்று ஜவான் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தார். எனவே அவரும் நூறு கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறார் என கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X