ராஜமவுலிக்காக பல ஹீரோக்கள் வெயிட்டிங், அவரோ அந்த ஹீரோவுக்கு காத்திருக்கார்...சிக்க மாட்டேங்கிறாரே?
சென்னை: இயக்குனர் ராஜமவுலிக்காக பல ஹீரோக்கள் காத்திருக்கும்போது, அவர் ஒரு ஹீரோவுக்காகக் காத்திருக்கிறார்.
இதுவரை தோல்வியே கண்டிராத இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இயக்கி இருந்தாலும் அத்தனையும் ஹிட். அதுதான் ராஜமவுலியின் திறமை.

ஆர்.ஆர்.ஆர்.
இவர் இயக்கிய பாகுபலி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம், ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.

ஆலியா பட்
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பிரின்ஸ்
இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க, டாப் நடிகர்களே காத்திருக்கும்போது, அவர் ஒரு ஹீரோவுக்காக காத்திருக்கிறார். அவர் தெலுங்கு சினிமாவின் 'பிரின்ஸ்' மகேஷ்பாபு.

அட்வான்ஸ்
இருவரையும் வைத்து படம் பண்ண, ராஜமவுலிக்கு தெலுங்கு தயாரிப்பாளர் கே.எல்.நாராயணா அட்வான்ஸ் கொடுத்து பல வருடங்களாகி விட்டன. மகேஷ்பாபுக்காக காத்திருந்து, பிறகு அடுத்த ஹீரோவை வைத்து படம் இயக்க சென்றுவிடுகிறாராம் ராஜமவுலி.

கனவு படம்
இப்படியாகத் தள்ளிக் கொண்டே போகிறது இவர்கள் இணையும் படம். இந்நிலையில் மகேஷ்பாபு அளித்த பேட்டி ஒன்றில், நானும் ராஜமவுலியும் படம் பண்ண இருப்பது உண்மைதான். விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன். அது எனது கனவு படமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











