என்டிஆர் பேரனும்.. சிரஞ்சிவீ மகனும்.. ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம்.. அதிரும் டோலிவுட்!
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் இளம் சூப்பர் ஸ்டார்களாக திகழும் என்டிஆர் பேரனாகிய ஜூனியர் என்டிஆரும், சிரஞ்சீவியின் மகனான ராம் சரணும் இணைந்து ராஜமெளலி இயக்கத்தில் புதிய பிரமாண்டப் படத்தில் நடிக்கவுள்ளனர். இதன் பூஜை வெகு பிரமாண்டமாக இன்று நடந்தது.
இந்தப் படத்தின் பூஜை குறித்த அறிவிப்பையே படு வித்தியாசமாக ஒரு வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார் ராஜமெளலி. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே எக்குத்தப்பாக எகிறி விட்டது.
பாகுபலி, பாகுபலி 2 என அடுத்தடுத்து அதிர வைத்த ராஜமெளலி தற்போது இரு இளம் சூப்பர்ஸ்டார்களை முதல் முறையாக இணைத்து நடிக்க வைக்கப் போகிறார்.

அதிரடியான கதையுடன்
ஏற்கனவே ராணா, பிரபாஸை வைத்து அவர் காட்டிய மேஜிக்கின் மயக்கத்திலிருந்தே தெலுங்கு ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அடுத்த அசகாய கதைக்கு அவர் இடம் பெயர்ந்து விட்டார்.

ஆர்ஆர்ஆர் பட பூஜை
இப்போதைக்கு இப்படத்திற்கு RRR என்று பெயரிட்டுள்ளார் ராஜமெளலி. இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடந்த இந்தப் பூஜையில் தெலுங்குத் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் கலந்து கொண்டனர். ராணா, பிரபாஸும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முதல் முறையாக ராம் சரண், ஜூனியர் என்டிஆர்
ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. இதுவே முதல் முறையாகும். எனவே இருவரது ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இப்போதே காத்திருப்பைத் தொடங்கி விட்டனர்.

திரில்லர் கதையில்
பாகுபலியைப் போலவே இந்தப் படமும் ஒரு அதிரடியான பிரமாண்டமான படமாக இருக்கும் என்கிறார்கள். அதேசமயம் இது வரலாற்றுக் கதையாக இருக்காது, திரில்லர் கதை என்று சொல்கிறார்கள். படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் அண்ணன் தம்பியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பக்கா ஸ்கிரிப்ட்
இந்தப் படத்திற்கான பணிகளை கடந்த ஏப்ரல் மாதமே ஆரம்பித்து விட்டார் ராஜமெளலி. கதையை மிகவும் சிறப்பான முறையில் மெருகேற்றி அனைத்துப் பூர்வாங்கப் பணிகளையும் முடித்த பிறகே இன்று பூஜை போட்டுள்ளார். எனவே படம் பக்கவாக இருக்கும் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











