ஜப்பானில் திரையிடப்பட்ட ஆர்ஆர்ஆர்.. ராஜமௌலி நெகிழ்ந்துபோய் என்ன சொல்லிருக்காரு பாருங்க

சென்னை: ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. அதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. இந்த சூழலில் அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் சூழலில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் ராஜமௌலி எமோஷனலாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Rajamouli Put Emotional Post About RRR Movie Screening in Japan

பாகுபலி: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன்போது பேசியிருந்த மணிரத்னம் பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வசூலை அள்ளிய பாகுபலி: பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்ரி தென்னிந்தியாவின் படங்கள் பாலிவுட்டிலும் வசூலை அள்ளலாம் என நிரூபித்த படமும் பாகுபலிதான்.

ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார். அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி ஒரு பத்தை இயக்கவிருக்கிறார்.

ஜப்பானில் ஆர்ஆர்ஆர்: இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் சிறப்பாக திரையிடப்பட்டது. அதுமட்டுமின்றி சில பெண்கள் அந்தப் படத்தை நாடகமாகவும் அரங்கேற்றம் செய்தனர். இதுகுறித்து ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், "110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இசை நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டதில் எனக்கு பெருமை. படத்தை போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்துபோயிருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X