அடுத்த படம் என்ன? வாய் திறந்தார் ராஜமௌலி!

By Shankar

சென்னை: தனது அடுத்த படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. 2018-ம் ஆண்டு சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தை இயக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

மெகா வெற்றிப் பெற்ற பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பின் ராஜமௌலியின் அடுத்த படம் என்னவென்று பலவிதமான யூகங்கள் வெளியாகின.

Rajamouli reveals upcoming projects

இப்போதுதான் தனது அடுத்த படங்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.

முதலில் சமூக அக்கறையுடன் கூறிய படமொன்றை முதலில் இயக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதில் நடிப்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. அவர் தந்தை எழுதியுள்ள முதல்வன் 2 கதையா என்றும் தெரிவிக்கவில்லை. இப்படத்தை தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இப்படம் தெலுங்கா, தமிழ் - தெலுங்கா தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து 2019-ல் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதனை கே.எல்.நாராயணா தயாரிப்பார் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

இந்தப் படங்களில் தேவைப்பட்டால் மட்டுமே பிரமாண்டம் காட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X