twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டரில் அடிவாங்கிய தலைவி.. ஆளவிடுங்கடா சாமின்னு தெறித்து ஓடிய ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்!

    |

    சென்னை: ஏற்கனவே கேஜிஎஃப் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு சென்ற நிலையில், தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீசும் பின் வாங்கி உள்ளது.

    வரும் அக்டோபர் 13ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு இயக்குநர் ராஜமெளலியின் பிரம்மாண்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    ஜெயம் டூ கோமாளி … ஜெயம்ரவி தனிஒருவனாக கெத்துக்காட்டிய டாப் 5 திரைப்படங்கள்… பிறந்த நாள் ஸ்பெஷல் !ஜெயம் டூ கோமாளி … ஜெயம்ரவி தனிஒருவனாக கெத்துக்காட்டிய டாப் 5 திரைப்படங்கள்… பிறந்த நாள் ஸ்பெஷல் !

    தள்ளிப்போன ராஜமெளலி படம்

    தள்ளிப்போன ராஜமெளலி படம்

    பாகுபலி படங்களை இயக்கி 2000 கோடி பாக்ஸ் ஆபிஸை பார்த்த இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் தான் ஆர்.ஆர்.ஆர். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    பயம் வந்துடுச்சு

    பயம் வந்துடுச்சு

    கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கி உள்ள நிலையில், தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்கப்பட்டு இருந்தாலும், மக்கள் கூட்டம் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க தயக்கம் காட்டி வருவது சமீபத்தில் வெளியான அக்‌ஷய் குமாரின் பெல்பாட்டம் மற்றும் கங்கனா ரனாவத்தின் தலைவி உள்ளிட்ட படங்களில் பாக்ஸ் ஆபிஸ் அடி வாங்கியதை பார்த்தாலே தெரிந்து விட்டது.

    நேரடி ஒடிடிக்கு வாய்ப்பில்லை

    நேரடி ஒடிடிக்கு வாய்ப்பில்லை

    200 முதல் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஒடிடிக்கு செல்ல வாய்ப்பே இல்லை. ஒடிடி உரிமை விற்கப்பட்டாலும் அதிக பட்சம் 100 கோடியை தாண்டாது என்கின்றனர். இந்நிலையில், தியேட்டர்களில் கூட்டத்தை பார்த்தால் மட்டுமே படத்தை தைரியமாக ரிலீஸ் செய்ய முடியும் என்கிற முடிவுக்கு படக்குழு வந்து விட்டது.

    தள்ளிப்போன கேஜிஎஃப்

    தள்ளிப்போன கேஜிஎஃப்

    தியேட்டரில் கூட்டம் இந்த ஆண்டுக்கு வராது என்பதை நன்கு உணர்ந்து தான் முன்னரே கன்னட திரைப்படமான கேஜிஎஃப் சாப்டர் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் 14க்கு ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் தேதியை அறிவித்தது. தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு என தொடர்ந்து பெரிய படங்கள் புக் செய்யப்பட்டு வருவதால் ஆர்.ஆர்.ஆர் படம் எந்த தேதியில் வெளியாகும் என்கிற தேதியை குறிப்பிடாமல் தள்ளிப் போயுள்ளது.

    தீபாவளி ரிலீஸ் சாத்தியமா

    தீபாவளி ரிலீஸ் சாத்தியமா

    அக்‌ஷய் குமாரின் பெல்பாட்டம், கங்கனா ரனாவத்தின் தலைவி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கே வசூல் பெருமளவில் குறைந்துள்ள நிலையில், ராஜமெளலி, பிரசாந்த் நீல் உள்ளிட்ட இயக்குநர்கள் அடுத்த ஆண்டுக்கு தாவி ஓடிவிட்டனர். இந்நிலையில், தமிழில் இந்த தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் சாத்தியமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    Bahubali Director SS Rajamouli’s magnum opus RRR movie again postponed without mentioning the release date. Before KGF 2 also postponed to next year summer for this pandemic reason.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X