பாகுபலியை விட மிரட்டும் போலிருக்கே.. ராஜமவுலி படத்துக்காக ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் பயிற்சி!

By

ஐதராபாத்: ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்துக்காக ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் படம், 'ஆர்ஆர்ஆர்'. அதாவது இரத்தம் ரணம் ரெளத்திரம்.

இதில், தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர்.

கீரவாணி இசை

கீரவாணி இசை

ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறும் மொழிகளில் படம் உருவாகி வருகிறது.

ஆலியா பட்

ஆலியா பட்

இதில் ராம் சரண் மனைவியாக, சீதா என்ற கேரக்டரில் இந்தி நடிகை ஆலியா பட் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படம் இது. கடந்த மார்ச் மாதம் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாகப் படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் படப்பிடிப்பில் இணைந்தார்.

Recommended Video

VJ PALOMA CHAT | கல்யாணம் பண்ணுங்க LIFE நல்லாருக்கும் | V-CONNECT | FILMIBEAT TAMIL
சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

இதற்கிடையே, இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக, ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரபல ஸ்டன்ட் இயக்குனர் சாலமன் ராஜூ, இந்த சண்டை காட்சியை தனித்துவமாக உருவாக்குகிறார். அதற்காகத்தான் இந்தப் பயிற்சி என்கிறார்கள். அதனால், பாகுபலியை விட ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X