வலிமை சந்தித்த அதே பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆர்ஆர்ஆர்... எப்படி தீர்க்க போறாங்க?

சென்னை : இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ஆர்ஆர்ஆர். ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆயினும் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் எதிர்கொண்ட பிரச்சினையை இந்தப் படமும் எதிர்கொண்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ஆர்ஆர்ஆர் படம். இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண், அஜய் தேவ்கன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தற்போது சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பிரம்மாண்ட படம்

பிரம்மாண்ட படம்

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீசுக்கு முன்னதாகவே அதிகமான வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது. வெளிநாட்டு உரிமை மற்றும் மற்ற மொழிகளில் வெளியீட்டு உரிமைகள் போன்றவற்றின்மூலம் பல மடங்கு வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது.

விஷுவல் ட்ரீட்

விஷுவல் ட்ரீட்

சுதந்திர போராட்ட காலத்தை நம்முடைய கண்முன்னே நிறுத்தியுள்ளது படம். தன்னுடைய முந்தைய பாகுபலி படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் விஷுவல் ட்ரீட்டை ரசிகர்களுக்கு ராஜமௌலி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒளிப்பதிவு, பாடல்கள், நடனம் மற்றும் திரைக்கதை என எந்த வகையிலும் குறை வைக்காமல் படத்தை ராஜமௌலி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 அதிகமான படத்தின் நீளம்

அதிகமான படத்தின் நீளம்

ஆனால் படத்தின் குறை என்று பார்த்தால், பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட்டை இந்தப் படத்தில் வீணடித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். அவர் பெயருக்கு படத்தில் வந்து போகிறார் என்றும் கூறியுள்ளனர். அதேபோல படத்தின் நீளம் 3 மணிநேரத்திற்கு உள்ளதாக பிற்பகுதியில் தொய்வு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வலிமை சந்தித்த அதே பிரச்சினை

வலிமை சந்தித்த அதே பிரச்சினை

முன்னதாக கடந்த மாதத்தில் வெளியான அஜித்தின் வலிமை படமும் இதே பிரச்சினையை சந்தித்தது. வலிமை படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் படக்குழுவினர் சில காட்சிகளை குறைத்து படத்தை ட்ரிம் செய்தனர். இந்நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படமும் அதே பிரச்சினையை சந்தித்துள்ளது.

எப்படி எதிர்கொள்வார்கள்?

எப்படி எதிர்கொள்வார்கள்?

இதையடுத்து இந்த விமர்சனத்தை படக்குழுவினர் மற்றும் இயக்குநர் எவ்வாறு எதிர்கொள்வார்கள் மற்றும் வலிமை படம் போலவே ஆர்ஆர்ஆர் படத்தின் நீளமும் குறைக்கப்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். படம் அனைத்து வகையில் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ள நிலையில், நீளம் குறித்த நெகட்டில் கமெண்ட்டிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X