HCA Awards 2023: பெஸ்ட் ஸ்டண்ட் கேட்டகிரியில் RRR படத்துக்கு விருது... ஆஸ்கர் ரேஸில் முன்னிலை

லாஸ் ஏஞ்சல்ஸ்: தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் சர்வதேச அளவில் விருதுகளை வென்று அசத்தி வருகிறது.

இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில், Critics Choice Awards விழாவில் மேலும் இரு விருதுகள் கிடைத்தது.

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு சர்வதேச விருதை வென்று அசத்தியுள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.

 சர்வதேச விருதுகளை வெல்லும் RRR

சர்வதேச விருதுகளை வெல்லும் RRR

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநரான ராஜமெளலி, தற்போது சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறார். ராஜமெளலி இயக்கிய RRR கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்த RRR தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று அசத்தி வருகிறது.

 பெஸ்ட் ஸ்டண்ட் விருது வென்று அசத்தல்

பெஸ்ட் ஸ்டண்ட் விருது வென்று அசத்தல்

2023 ஆஸ்கர் போட்டியில் RRR படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 6வது Hollywood Critics Association விருது விழாவில், சிறந்த சண்டைக் காட்சிகளுக்கான விருது RRR படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. Hollywood Critics Association சார்பில் வழங்கப்பட்ட பெஸ்ட் ஸ்டண்ட் விருதை RRR படத்தின் இயக்குநர் ராஜமெளலி பெற்றுக் கொண்டார்.

 ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆருக்கு நன்றி

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆருக்கு நன்றி

பெஸ்ட் ஸ்டண்ட் கேட்டகிரியில் HCA 2023 விருதை வென்ற RRR இயக்குநர் ராஜமெளலி தனது டீமுக்கு நன்றி தெரிவித்தார். RRR படத்துக்கு ஸ்டண்ட் கோரியோகிராபி செய்த நிக்கி பாவெல் உட்பட அவரது குழுவினருக்கு நன்றி கூறினார். மேலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்த ராஜமெளலி, இறுதியாக ஜெய்ஹிந்த் கூறி தனது உரையை முடித்தார். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ள நிலையில், RRR படத்துக்கு மேலும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முன்னதாக ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது RRR திரைப்படம். Critics Choice Awards விழாவில், இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றிருந்தது RRR. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம், சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை வென்றது. அதேபோல் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்றிருந்தார் கீரவாணி. இதனடிப்படையில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X